Breaking News



சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்குமிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. நேற்றிரவு நடந்த நீண்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டது.

இருதரப்பும் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக, சந்திப்பின் பின்னர் சுதந்திரக்கட்சியின் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

மீரிஹனவிலுள்ள கோட்டாபயவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுதந்திரக்கட்சியின் சார்பில் மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர,லசந்த அழகிய வண்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரவு 7 மணிக்கு ஆரம்பித்த கலந்துரையாடல் 9 மணிவரை நீடித்தது.

இந்த சந்திப்பில் இருதரப்பிற்குமிடையில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. புரிந்துணர்வு உடன்படிக்கையில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன என்பது குறித்து நேற்று ஆராயப்பட்டது. எனினும், அதில் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை. எனினும், தொடர்ந்தும் இரு தரப்பும் கலந்துரையாடுவதென முடிவாகியுள்ளது.

இதேவேளை, நாளை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்தியகுழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பெரமுனவை ஆதரிப்பதா என்ற முடிவு எட்டப்படும். தற்போதைய நிலையில், பெரமுனவை ஆதரிக்கும் முடிவையே சு.க எடுக்குமென தெரிகிறது.

No comments

Note: Only a member of this blog may post a comment.