Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 18 அக்டோபர், 2019

ஐ.தே.கவுடனான தமிழ் அரசு கட்சியின் நெருக்கம், ஜனாதிபதி வேட்பாளர்களுடனான பேச்சில் தாக்கத்தை செலுத்தும்: சுரேஷ் எச்சரிக்கை!

  admin       வெள்ளி, 18 அக்டோபர், 2019


யாழ்ப்பாணத்திற்கு வரும் ஐ.தே.க பிரமுகர்களின் நிகழ்வுகளில் மட்டும் தமிழ் அரசு கட்சியினர் பங்குகொள்வது, ஜனாதிபதி வேட்பாளர்களுடனான பேச்சுக்களில் தாக்கத்தை செலுத்தும் என எச்சரித்துள்ளார் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஐந்து கட்சி கூட்டணியென்பது தேர்தலிற்கான கூட்டணியல்ல, ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தமிழ் மக்கள் சார்பான நிலைப்பாடுகளை ஒன்றுபட்டு முன்வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட உடன்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனது இல்லத்தில் இன்று (18) நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் அரசு கட்சி ஆரம்பத்திலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாக கூறி வருகிறது. அரசாங்கத்தின் சகல அபிவிருத்தி வேலைகளிலும் இணைந்து செயற்படுவதாகவும் கூறி வந்திருக்கிறார்கள். பிரதமரோ, ஜனாதிபதியோ யாழ்ப்பாணம் வரும்போது இவர்கள் வெளிப்படையாக ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

சிவமோகன், சிறிதரன் போன்றவர்கள் பலர் சஜித்திற்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவில் இது குறித்து முடிவெடுக்கா விட்டாலும், அவர்களிடையேயும் வித்தியாசமான கருத்துக்கள் உள்ளன.


 
ஈ.பி.ஆர்.எல்.எவ் அல்லது தமிழர் கூட்டணி ஒற்றுமையாக இந்த விடயத்தில் செயற்பட்டதற்கு காரணம், தமிழர்களின் அடிப்படை, அரசியல் பிரச்சனைகளில் ஒன்றுபட்டு செயற்பட, வேட்பாளர்களிடம் அதைப்பற்றி சொல்வதற்காகத்தான். தமிழ் தேசிய கூட்டமைப்போ, தமிழரசுக்கட்சினரோ கடந்த 5 வருடத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொள்கைகளை ஆதரித்து அல்லவென்பதை தெளிவாக கூறிக்கொள்கிறோம்.

அவர்கள் தொடர்ந்து ஆளும் கட்சியின் பங்குதாரராக, அரசை பாதுகாப்பவர்களாக தொடர்ந்து வெளிப்படையாக செயற்பட்டு வருகிறார்கள். அது தொடர்பாக மக்கள் முடிவெடுப்பார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் ஏதாவது சில கோரிக்கைகளை வென்றெடுக்கவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் அரசு கட்சியோ, கூட்டமைப்போ செய்கின்ற ஏனைய நடவடிக்கைகளிற்கு நாங்கள் பங்குதாரர்களும் இல்லை, நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளவுமில்லை.


 
ஐ.தே.கவின் நிகழ்வுகளில் மட்டும் தமிழ் அரசு கட்சியினர் கலந்து கொள்வது, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுடன் பேச்சு நடத்தவதிலும் தாக்கத்தை செலுத்தும். ஏனைய கட்சிகளுடன் பேசும்போது, பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

இரண்டு நாட்களின் முன்னர் கோட்டாபாய பத்திரிகையாளர் மத்தியில் பேசும்போது, தமிழ் மக்களிற்கு விரோதமான கருத்துக்களை கூறியிருந்தார். தமிழ் மக்கள் மத்தியில் கோபமான சூழலை உருவாக்கும் விதமான பதில்கள் அவை. தமிழ் மக்களுடன் உட்கார்ந்து பேசக்கூட தயாராக இருக்கிறார்களா? இவர்களின் கூட்டாளிகளான விமல் வீரவன்ச போன்றவர்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்க தயாரில்லையென்று கூறியுள்ளனர்.

ஒரு பக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஐ.தே.கவுடன் நெருங்கி செயற்படுகிறார்கள். ஆனால், இன்னும் முடிவெடுக்கவில்லையென இரா.சம்பந்தன் கூறிக்கொண்டிருக்கிறார்.

இந்த ஐந்து கட்சிகளும் இணைந்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் சில நிலைப்பாடுகளை முன்வைப்பதற்கான கூட்டு மாத்திரமே.

ஏற்கனவே 15 வருடகாலம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தோம். அங்கு பல பிரச்சனைகளை சுட்டிக்காட்டினோம். அவை இன்னும் தீர்க்கப்படவில்லை. அப்படியிருக்க, இது மாகாணசபைக்கோ, நாடாளுமன்றத்திற்கானதோ கூட்டு அல்ல என்றார்
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஐ.தே.கவுடனான தமிழ் அரசு கட்சியின் நெருக்கம், ஜனாதிபதி வேட்பாளர்களுடனான பேச்சில் தாக்கத்தை செலுத்தும்: சுரேஷ் எச்சரிக்கை!

Previous
« Prev Post