Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,politics,thinakkural,uthayan,srilankan tamil,jaffna,corona virus jaffna,jaffna news,jaffna sri lanka,jaffna news paper,jaffna phone shop,jaffna news today,jaffna tamil tv news,lanka,lankasri,parliament,today news sri lanka,tamilwin news,lankasri news,sri lanka latest news,sri lanka updates today,sri lanka current situation,news sri lanka,sri lanka tamil news

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

கோட்டாவை வெற்றிபெற வைத்து பெற வேண்டியதை கேட்டுப் பெற்றுங்கொள்ளுங்கள்: யாழ் மக்களிற்கு ஹத்துருசிங்க ஆலோசனை!

  admin       ஞாயிறு, 20 அக்டோபர், 2019


நாட்டின் மீது அதீத அக்கறையையும் நாடு தொடர்பில் சிறந்த எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளைக் கொண்டவரும் இந்த நாட்டிற்கு பொருத்தமான தலைவராகவும் காணப்படுகின்ற முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் ஐனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்சவை அனைவரும் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென யாழ் மாவட்ட பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போதே வடக்கு மக்களின் பிரச்சனைகள் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றும் வகையில் செயற்பட்ட கோட்டாபய ராஜபக்சவிற்கு வடக்கு மக்கள் இத் தேர்தலில் தமது ஆதரவை வழங்கி அவரை பெற்றி பெறச் செய்தால் பிரச்சனைகளையும் தீர்த்துக் கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.

பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக யாழில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்த பின்னர் அன்றைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவினால் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியான நான் நியமிக்கப்பட்டிருந்தேன். இங்கு ஐந்து வருடங்கள் நான் கடமையாற்றியிருக்கின்றேன். இங்கு வந்த போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்ற வேண்டிய தேவை இருந்தது.

இதற்கமைய அரச நிறுவனங்களுடன் இணைந்து அன்றைய ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உதவியுடன் கோட்டாபய ராஜபக்சவின் இணைப்புடன் இராணுவத் தளபதியின் ஆலோசனையில் இந்தப் பணிகளை முன்னெடுத்திருந்தேன். இந்த ஐந்து வருட காலப்பகுதியில் 21550 ஆயிரம் ஹெக்ரெயர் நிலங்களை விடுவித்து 133000 ஆயிரம் மக்களைக் குடியேற்றியிருந்தோம்.

அதே போன்று பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உதவிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகள், வீட்டுத் திட்ட உதவிகள் என இங்கு பல்வேறு பணிகளை இராணுவம் முன்னெடுத்திருந்தது. இவை அனைத்தையும் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவின் தலைமைத்துவத்திலும் அவரது எண்ணக்கருவிலேயே செய்தோம்.

அது மட்டுமல்லாமல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை செய்து கொடுத்து மீளக்குடியேற்றி வாழ்வை வளப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் செயற்பட்டிருந்தார். இவ்வாறான நிலையில் இங்கு இன்னும் குறிப்பிட்டளவு நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டியிருக்கின்றன. கல்வி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டியிருக்கின்றன. ஆகவே நடைபெறவிருக்கும் ஐனாதிபதி தேர்தலில் கோட்டாபய வெற்றி பெற்று வந்தால் காணிகளை விடுவிக்க முடியுமென்பதுடன் பொருளாதார ரீதியிலும் முன்னேற்றம் ஏற்படுவதுடன் வாழ்வையும் வளப்படுத்திக் கொள்ள முடியுமென்று நினைக்கிறேன்.

இந்த நாட்டிற்கு சிற்நத தலைவர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டியிருக்கின்றது. நிறைய விடயங்கள் தொடர்பில் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியிருக்கிறது. அதாவது இந்த நாட்டிற்கு என்ன தேவை, என்னத்தைச் செய்ய வேண்டும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். அவ்வாறான சிந்தனை கொண்டடிருக்கக் கூடிய கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற வேண்டும்.

இந்த இடத்தில் முன்னைய ஆட்சிக்காலத்தில் அதாவது மகிந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை நினைத்துப் பார்க்க வேண்டும். அந்தப் பணிகளுடன் இணைந்ததாக இன்னும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய தேவையும் இருக்கிறது. அத்தோடு எமது பிள்ளைகளின் கல்வி, பொருளாதாரம், வாழ்வாதாரம் குறித்தான முன்னேற்றம் அவசியமானதாகவும் இருக்கிறது.

ஆகையினால் இவை தொடர்பில் சிறந்த எண்ணங்களையும் நல்ல சிந்தனைகளையும் கொண்டவரையே தெரிவு செய்ய வேண்டும். அதற்காக நாங்கள் முன்மொழிந்துள்ள வேட்பாளர் தான் கோட்டாபய ராஜபக்ச.

யாழ் மக்களின் எண்ணங்கள் சிந்தனைகள் எனக்கும் தெரியும். ஏனெனில் நானும் அவர்களுடன் ஐந்து வருடங்களுக்கு மேலாக இருந்துள்ளேன். ஆகையினால் உங்களுக்கு தேவையானதை நீங்கள் பெற்றுக் கொள்வதற்கு இதையெல்லாம் செய்யக் கூடிய சிறந்த தலைவரான கோட்டாபய ராஜபக்சவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் தான் இந்த நாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைவராகவும் இருக்கின்றார் என்றார்.

இதே வேளை தேர்தல் பிரச்சாரங்களில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவது, யுத்தக் குற்றங்கள் தொடர்பிலும் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில்,

இராணுவத்தினர் எந்தக் காலத்திலும் யாருக்கும் சார்பாக அதாவது பக்கச் சார்பாக நடந்து கொள்வதில்லை. ஆனால் ஓய்வு பெற்ற பின்னர் அவர்கள் தங்கள் விருப்பத்திற்கமைய செயற்படுவார்கள். நானும் இராணுவத்தில் இருந்த ஓய்வு பெற்ற பின்னர் எனக்கு எல்லாவிதமான கருத்துக்களையும் சொல்வதற்கு சுதந்திரம் உள்ளது. நான் இப்போது இராணுவ உடை அணியாத சாதாரண நபராகவே இருக்கிறேன்.
மேலும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக இப்போது கதைக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாதுகாப்பு ஆலோகர் ஒருவர் கூறியது போன்று யுத்தக் குற்றங்கள் இலங்கையில் நடைபெறவில்லை. யுத்தத்தில் 140 000 ஆயிரம் பேர் இறந்தது என்பது உண்மைக்குப் புறம்பானது. யுத்தக் குற்றங்களில் எமது இராணுவம் ஈடுபடவில்லை. எமது இராணுவம் அப்படி நடப்பதும் இல்லை. இந்த யுத்தக் குற்றங்கள் சம்மந்தமாக கதைப்பது எனது பொறுப்பும் அல்ல என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கோட்டாவை வெற்றிபெற வைத்து பெற வேண்டியதை கேட்டுப் பெற்றுங்கொள்ளுங்கள்: யாழ் மக்களிற்கு ஹத்துருசிங்க ஆலோசனை!

Previous
« Prev Post