Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 10 அக்டோபர், 2019

ரணிலின் பின்னணியில் கூட்டமைப்பை உடைக்கும் முயற்சியில் சிவஞானசோதி?

  admin       வியாழன், 10 அக்டோபர், 2019

ஐ.தே.க அரசாங்கத்திடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களிற்கு விசேட நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன, அபிவிருத்தி என்ற வார்த்தையின் மயக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கிறது என பரவலாக விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த விடயத்தில் ரணில் அரசு மேற்கொள்ளும் சூழ்ச்சிகரமான நடவடிக்கையொன்று பற்றிய தகவல்களை தமிழ்பக்கம் பெற்றுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ள புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக வழங்கப்படும் விசேட நிதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களிற்கும் வழங்கப்படுவதில்லை, ரணில் விக்கிரமசிங்கவிற்கு நெருக்கமாக உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர்களிற்கு மட்டுமே அந்த நிதி வழங்கப்படுகிறது.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், சி.சிறிதரன், சாந்தி சிறிஸ்கந்தராசா, சிவமோகன், ஞா.சிறிநேசன், துரைரட்டணசிங்கம் ஆகிய எம்.பிக்களிற்கே வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிதி எம்.பிக்களின் ஊடாகவே வழங்கப்பட்டு வந்தாலும், ரணில் அரசுடன் இருக்கும் நெருக்கத்தின் அடிப்படையில், எம்.பியாக இல்லாத போதும், வவுனியாவை சேர்ந்த ப.சத்தியலிங்கத்தின் பரிந்துரைகளிற்கும் இந்த விசேட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் ரணில் விக்கிரமசிங்கவை பகிரங்கமாக விமர்சித்து வந்த சீ.யோகேஸ்வரனிற்கும் இந்த நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்த பாரபட்சமான நிதி பங்கீட்டின் சூத்திரதாரியாக, ரணிலின் கீழுள்ள அமைச்சுக்களின் செயலாளரான சிவஞானசோதியே செயற்பட்டு வருகிறார். நிதியொதுக்கீடு செய்யப்பட்டாத ஏனைய எம்.பிக்கள் அவரை சந்தித்து விளக்கம் கோரியபோதும், அதற்கு உரிய பதில் வழங்காமல் தட்டிக்கழித்து வருகிறார் என தெரிவிக்கப்படுகிறது.

பாரபட்சமான நிதியொதுக்கீட்டின் மூலம், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ரணில்- சிவஞானசோதி கூட்டணி ஈடுபடுகிறதா என்ற சந்தேகத்தையும் அது ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, ரணில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதியை அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் அரசு கட்சியின் சார்பில் களமிறக்குவதாக, கட்சியினால் வாக்களிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரணில் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை யாழில் திறந்து வைப்பதில் சிவஞானசோதி தீவிரமாக இறங்கியுள்ளார்.

இன்றையதினம் யாழிலுள்ள பிரதேச செயலகங்கள் ரீதியாக அவரது அமைச்சினால் தகவலொன்று கோரப்பட்டுள்ளது. பிரதேச செயலக ரீதியாக அபிவிருத்தி பணிகள் முடிவடைந்த திட்டங்களின் விபரத்தை தமக்கு ஒப்படைக்கும்படியும், தானே நேரில் வந்து அவற்றை திறந்து வைப்பதாகவும் அறிவித்துள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ரணிலின் பின்னணியில் கூட்டமைப்பை உடைக்கும் முயற்சியில் சிவஞானசோதி?

Previous
« Prev Post