Breaking News


2015இல் மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க வாக்களிக்க மக்களிடம் கோரிவிட்டு, இப்பொழுது மஹிந்த தரப்புடன் பேசுவது எந்த வகையில் நியாயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பை தொண்டைப்பிடி பிடித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன்.

இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்கள் நடந்து வருகிறது. பொது வேட்பாளரா, யாரை ஆதரிப்பது, பகிஸ்கரிப்பதா என்பது பற்றி கலந்துரையாடல்கள் நடக்கிறது. இதற்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு, கோட்டாபயவுடன் பேச்சு நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர்கள் கோட்டாபயவை சந்திக்க கேட்டதாகவும், மஹிந்த ராஜபக்சவுடன் பேசுமாறு அவர் சொன்னதாகவும், மஹிந்தவுடன் பேசிய பின்னர் கோட்டாபயவை சந்திக்க கேட்டுள்ளதாக செய்திகள் வருகிறது.

2015ம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்காக மைத்திரிபால சிறிசேன என்ற மகாத்மா காந்தியை, மார்ட்டின் லூதர் கிங்கை, நெல்சன் மண்டேலாவை வெல்ல வைக்க பிரச்சாரம் செய்தவர்கள், இப்பொழுது கோட்டாபயவுடன் பேச வேண்டுமென்கிறார்கள் என்றால், இதில் என்ன நியாயம் இருக்கிறதென தெரியவில்லை.

இவர்கள் இதுவரை சொல்லிவந்ததன்படி, அவர்கள் போர்க்குற்றவாளிகள், சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்த வேண்டுமென்பதுதான். அதுதான் எமது நிலைப்பாடும். அதற்காக தொடர்ந்து செயற்படுகிறொம். இதுவரை தமிழ் மக்களின் நலனில் அடிப்படையில், பூகோள போட்டியை தமிழர்களிற்கு சாதகமாக மாற்றுவதென்றால் ஜனாதிபதி தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தோம்.

அப்பொழுது எமது நிலைப்பாடு மஹிந்தவை வெல்ல வைப்பதற்கானதென்றும், இப்பொழுது எமது பகிஸ்கரிப்பையும் கோட்டாபயவை வெல்ல வைப்பதற்கானதென்றும் சிலர் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படும் நிலையில், இவர்களோடு பேசுவதில் எந்தவொரு நியாயப்படும் இல்லை.

இதுவரை அவர்கள் சொல்லி வந்த நிலைப்பாடு பற்றி என்ன சொல்லப் போகிறார்கள். இது தொடர்பில் மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்றார்.

       மக்கள் மத்தியில் தமிழ் தேசிய முன்னனியினரின் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிழம்பியுள்ளதை காணமுடிகிறது!

No comments

Note: Only a member of this blog may post a comment.