Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 5 அக்டோபர், 2019

கோட்டாவை நிபந்தனையின்றி ஆதரிக்கிறது சு.க: 9ம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை!

  admin       சனி, 5 அக்டோபர், 2019


ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவையும், தாமரை மொட்டு சின்னத்தையும் எந்த நிபந்தனைகளுமின்றி ஆதரிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்துள்ளார். கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இந்த அறிவிப்பை விடுத்தார்.

தாமரை மொட்டு சின்னத்தை மாற்ற வேண்டுமென மைத்திரி பலமுறை தெரிவித்திருந்த நிலையில், தனது நிலைப்பாட்டை கைவிட்டு, கோட்டாபயவை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளார்.

இதன்படி சு.க இரண்டு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளது. முதலாவது சு.க- கோட்டாபய ராஜபக்ச இடையேயான ஒப்பந்தம். அடுத்தது சு.க- பெரமுன இடையேயான ஒப்பந்தம்.

முதலாவது ஒப்பந்தம் கோட்டாபயவின் மீரிஹனவிலுள்ள இல்லத்தில் கையெழுத்தாகவுள்ளது.

மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்சவுடனான கலந்துரையாடலின் பின்னர், மைத்திரி இந்த முடிவிற்கு வந்துள்ளா்.

நேற்றிரவு சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு கூடியபோது, கோட்டாபயவிற்காக அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதென முடிவாகியுள்ளது. சு.க- பெரமுன ஒப்பந்தத்தில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள், கட்சியால் பரிந்துரைக்கப்படும் யோசனைகளில் இறுதிநேர திருத்தம் மேற்கொண்டு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட மத்தியகுழு நேற்று ஜனாதிபதிக்கு அனுமதியளித்தது.

சு.கவின் நிபந்தனையற்ற ஆதரவு கோட்டாபய தரப்பை உற்சாகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் கிடைத்த நீதிமன்ற தீர்ப்பிற்கு அடுத்ததாக இந்த முக்கிய அரசியல் நகர்வு கோட்டாபய தரப்பின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

சு.க- பெரமுன ஒப்பந்தத்தில் எதிர்கால தேர்தல்களில் பொதுவான சின்னத்தில் களமிறங்குவது, வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் உள்ளடங்கியிருக்கும்.

இது வரும் ஒக்ரோபர் 9ம் திகதி, கோட்டாபயவின் முதலாவது தேர்தல் பிரச்சாரம் அநுராதபுரத்தில் நடைபெறும்போது கையெழுத்தாகும். அன்றைய தினமே, பெரமுனவின் கூட்டணி கட்சிகளிற்கிடையிலான ஒப்பந்தமும் கைச்சாத்தாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கோட்டாவின் குடியுரிமை வழக்கில், தீர்ப்பு அவருக்கு எதிராக அமையலாமென கருதியதாலேயே, தீர்ப்பு வரும்வரை மைத்திரிபால சிறிசேன இழுத்தடிப்பை மேற்கொண்டுள்ளார். கோட்டாபயவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால், தான் களமிறங்கலாமென்ற யோசனையில் அவர் இருந்ததாக தெரிகிறது. எனினும், நீதிமன்ற தீர்ப்பு கோட்டாபயவிற்கு சாதகமாக அமைந்ததால் அவர் இறுதிநேரத்தில் முடிவை மாற்றியுள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கோட்டாவை நிபந்தனையின்றி ஆதரிக்கிறது சு.க: 9ம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை!

Previous
« Prev Post