Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

டிப்பர் பிரேக் பிடிக்கவில்லையாம்: ஹைஏஸை பந்தாடியதில் ஒருவர் பலி!

  admin       ஞாயிறு, 20 அக்டோபர், 2019

கிளிநொச்சி ஏ-9 வீதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெபெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நால்வர் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 156 ஆம் கட்டை பகுதியின் ஏ-9 வீதியில் ஹைஏஸ் வாகனம் ஒன்றுடன் டிப்பர் வாகனம் மோதி இந்த விபத்து நடந்தது.

விபத்தில் ஹைஏஸ் வாகனத்தில் பயணித்த ஐவர் காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார்.

டிப்பர் வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! டிப்பர் பிரேக் பிடிக்கவில்லையாம்: ஹைஏஸை பந்தாடியதில் ஒருவர் பலி!

Previous
« Prev Post