Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 31 அக்டோபர், 2019

ரயிலில் சமைத்தவர்களால் விபரீதம்: பாகிஸ்தான் ரயில் விபத்தில் 73பேர் பலி!

  admin       வியாழன், 31 அக்டோபர், 2019

 
பாகிஸ்தானில் கராச்சி – ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரகிம் யார் கான் பகுதிக்கு அருகே லியாகட்பூர் நகரில் கராச்சி – ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

ரயிலில் ஏற்பட்ட தீ தொடர்ச்சியாக 3 பெட்டிகளிலும் மளமளவெனப் பரவியது. இதன் காரணமாக ரயிலில் இருந்தவர்கள் தீயிலிருந்து தப்பிக்க வெளியே குதித்தனர். இந்த தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 73 ஆக தற்போது அதிகரித்துள்ளது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ராஷித் கூறும்போது, “சமையல் அடுப்புகள் இரண்டு வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட ரயில்வே தடம் இரண்டு மணி நேரத்தில் சரியாகும்” என்றார்.
 
ரயிலில் பயணம் செய்தவர்கள் சமையல் செய்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்தது. ரயிலில் சிலர் சமைப்பதை அவதானித்த இரண்டு காவலர்கள் அவர்களை தடுத்துள்ளனர். எனினும், காவலர்கள் அங்கிருந்த சென்றதன் பின்னர் மீண்டும் சமையில் ஈடுபட்டபோது, விபரீதம் நிகழ்ந்துள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ரயிலில் சமைத்தவர்களால் விபரீதம்: பாகிஸ்தான் ரயில் விபத்தில் 73பேர் பலி!

Previous
« Prev Post