Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,politics,thinakkural,uthayan,srilankan tamil,jaffna,corona virus jaffna,jaffna news,jaffna sri lanka,jaffna news paper,jaffna phone shop,jaffna news today,jaffna tamil tv news,lanka,lankasri,parliament,today news sri lanka,tamilwin news,lankasri news,sri lanka latest news,sri lanka updates today,sri lanka current situation,news sri lanka,sri lanka tamil news

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 30 அக்டோபர், 2019

விரும்பியவருக்கு தபால்மூலம் வாக்களியுங்கள்: 5 கட்சி கூட்டத்தில் முடிவு!

  admin       புதன், 30 அக்டோபர், 2019


தபால் மூல வாக்களிப்பில் மக்கள் விரும்பியவர்களிற்கே வாக்களிக்கலாமென 5 கட்சிகள் கூட்டாக இன்று முடிவு செய்துள்ளது.

5 கட்சிகளின் கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போதே, மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் அரசு கட்சியின் சார்பில் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சீ.வீ.கே.சிவஞானம், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், சதானந்தன், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், என்.சிறிகாந்தா, ஹென்ரி மகேந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன். தமிழ்மக்கள் கூட்டணியின் க.அருந்தவபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்னும் வெளியாகாததால் எந்த முடிவையும் எடுப்பதில்லையென்றும், தபால்மூல வாக்களிப்பில் மக்கள் விரும்பியவர்களிற்கு வாக்களிக்கும்படியும் முடிவெடுக்கப்பட்டது.

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானதன் பின்னர் மீண்டும் கூடி, இறுதி நிலைப்பாடு எடுப்பதென்றும் தீர்மானமானது.

வாக்களிப்பது எப்படி????

நாளைக்கு #தபால்மூலம்_வாக்களிக்க இருக்கும் (போஸ்டல் வோட் பண்ணப்போகும்) ஆபீசர்ஸ் கவனங்களுக்கு..

#வாக்களிக்க_போங்கோ!

வாக்களிப்பது உங்கள் உரிமை!! 

புறக்கணிக்க வேண்டாம். 

புடிக்கல எண்டா வாக்குசீட்டை செல்லுபடியற்றதாக்கிறதும் உங்கட உரிமை தான்? 

#இது_ஒரு_ஆளை_தெரிவு_செய்யும்_தேர்தல்.

ஆக, ஒரே தெரிவுக்கு வாய்ப்பு! 

விருப்புரிமை உபவாய்ப்பு தான்? 

X : ஒரு புள்ளடி - ஏற்றுக்கொள்ளப்படும்.

1 : இலக்கம் ஒன்று - ஏற்றுக்கொள்ளப்படும்.

1 : 2 : இலக்கம் ஒன்று - இலக்கம் இரண்டு - ஏற்றுக்கொள்ளப்படும்.

1 : 2 : 3 : இலக்கம் ஒன்று - இலக்கம் இரண்டு - இலக்கம் மூன்று ஏற்றுக்கொள்ளப்படும்.

X : X : X : ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளடி - நிராகரிக்கப்படும்.

X : 1 : 2 ஒரு புள்ளடி & இலக்கம் ஏதாவது - நிராகரிக்கப்படும்.

வேற என்ன படம் கீறினாலும் - நிராகரிக்கப்படும்.

#ஆளடையாளத்தை_உறுதிப்படுத்தும்_ஆவணம் கட்டாயம் : 

• தேசிய அடையாள அட்டை 

அல்லது 

• செல்லுபடியாகும் பாஸ்போர்ட் 

அல்லது 

• செல்லுபடியாகும் லைசென்ஸ் 

அல்லது 

இதெல்லாம் ஒரேடியா இல்லாமல் போனால் மட்டும் 

• தொழில் அடையாளஅட்டையை (ஜொப் கார்ட்) கொண்டுபோகலாம்! 

#4 மணிநேர பணியக விடுமுறை எடுக்கலாம்.

நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இருதினங்களில், கட்டாயம் வாக்களிக்க இயலாமல் போனவர்கள் உங்களுங்கள் மாவட்ட செயலகங்களில் ஆறாம் திகதியன்றும் வாக்களிக்க முடியும். 

இருந்தாலும், இந்த இருதினங்களையும் தவறவிட்டிட்ட வேண்டாம்?   

#யாருக்கு_போட? 

என்னத்தைச்சொல்ல?? 

வாக்களிக்க சொல்வதுதான் உரிமை - கடமை சூழ்ந்தது! 

யாருக்கு  வாக்களிக்க சொல்லுவது, சட்டப்படி அரசுப்பணியில் குற்றத்துக்குரியது. 

இருந்தாலும்..

• யார் வரவேணும் எண்டு வாக்களிக்கிற தகுதி - தராதரம் இந்தமுறை எங்களிட்டை இல்ல? அல்லது நாங்கள் வாக்களிச்சு வரப்போறது ஒண்டும் தேவதூதனுமில்ல?? 

•• ஆனால், ஆர் வரக்கூடாதெண்டு உங்களுக்கு தெரியும்! 

ஆக, ஆர் வரக்கூடாதெண்டத்துக்காகத்தான் வாக்களிக்க வேண்டியிருக்கு இந்தமுறை??

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! விரும்பியவருக்கு தபால்மூலம் வாக்களியுங்கள்: 5 கட்சி கூட்டத்தில் முடிவு!

Previous
« Prev Post