Breaking News



அமைதிப்படை எனும் போர்வையில் நுழைந்து யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடத்திக் கொண்டிருந்தது இந்திய ராணுவம். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல் அவர்களுடன் போரிடமுடியாமல் இந்திய அமைதிப்படையானது தனது வீரத்தை அப்பாவி மக்கள் மீது காட்டியது கண்களில் தென்படுவோரை எல்லாம் வேட்டையாடியது கற்பழித்து கொன்றது தார் ஊற்றி கொளுத்தியது கவச வாகனங்களால் ஏற்றி நசுக்கியது.

இதன் உச்சமாக 1987 அக்டோபர் 21 தீபாவாளி தினத்தன்று நிகழ்ந்ததுதான் யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலை. யாழ்ப்பாண பொது மருத்துவமனைக்குள் நுழைந்த இந்திய அமைதிப் படை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் என ஒருவரைக் கூட விட்டுவைக்கவில்லை. மொத்தம் 70 பேர் மருத்துவமனையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாண பொது மருத்துவமனையே ரத்த வெள்ளத்தில் மிதந்தது. சடலங்களைப் போல நடித்து உயிர் தப்பியவர்கள், தண்ணீர் தண்ணீர் என கதறியபடியே மரணித்தவர்கள் என எண்ணற்ற ஓலங்களை உள்ளடக்கியது யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலை.

யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 32-வது ஆண்டு நினைவுநாள்!

No comments

Note: Only a member of this blog may post a comment.