Breaking News


பிரித்தானியாவில் உள்ள ராணி மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பொலிமர் பிலிம்கள் மூலம் புதிய டைஎலக்ட்ரிக் கபாசிடர் கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதில் பொலிமர் பிலிம்கள், டை எலக்ட்ரிக் கபாசிடரை சுற்றி பல அடுக்குகளாக சுற்றப்பட்டு அழுத்தப்பட்டுள்ளன. தற்போது, சந்தையில் கிடைக்கும் டை எலக்ட்ரிக் கபாசிடரை விட, பொலிபர் பிலிம்கள் சுற்றப்பட்ட டை (biaxially oriented polypropylene) எலெக்ட்ரிக் கபாசிடர் 30 மடங்கு அதிகமாக மின்சாரம் சேமிக்கிறது.

பேக்கரிகளில் பப்ஸ் தயாரிக்க, மாவு, பல அடுக்குகளாக மடிக்கப்பட்டு அழுத்தப்படும்.

அதைப் பார்த்து பொலிமர் பிலிம்களை பல அடுக்குகளாக, டை எலக்ட்ரிக் கபாசிடர் சுற்றி, அதிக சேமிப்பு திறனுள்ள கருவியை உருவாக்கும் ஐடியா கிடைத்ததாக ராணி மேரி மைய விஞ்ஞானிகள் தலைமை விஞ்ஞானி எமிலியானோ பிலோட்டி (Dr.Emiliano Bilotti) தெரிவித்துள்ளார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.