Breaking News



தென்மேற்கு வங்க கடலில் கன்னியாகுமரி மற்றும் இலங்கை அருகே வழிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதாக தமிழக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்னும் 3 நாட்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி, இலங்கையின் வடக்கு பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கடும் மழை பெய்யும்.

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந் திகதி ஆரம்பித்தது அன்று முதல் 4 நாட்களாக தினமும் மழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய மழையும் பெய்கிறது. வடகிழக்கு பருவமழை சரியான சமயத்தில் தொடங்கியதால் தொடர்ந்து மழை பெய்கிறது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்தது. அடுத்த மூன்று நாட்களிற்கும் அது நீடிக்கும் என்றும் தமிழக வானிலை ஆய்வு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.