Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 4 அக்டோபர், 2019

ஈராக்கில் மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை - 26 பேர் பலி

  admin       வெள்ளி, 4 அக்டோபர், 2019


ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

வேலை வாய்ப்பின்மை, ஊழல், பொருளாதார சரிவு, அரசு நிர்வாக மந்த செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து ஈராக்கில் போராட்டம் வெடித்துள்ளது. 

பாக்தாத், பாஸ்ரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் பரவி வருகிறது. பாக்தாதில் போராட்டக்காரர்கள் நடனமாடியும் முழக்கங்களை எழுப்பியும் வன்முறையில் ஈடுபட்டனர்

பாக்தாத்தில் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துகள் வாகனங்களுக்கு தீவைத்தனர். சாலைகளில் கார் டயர்கள் கொளுத்தப்பட்டன

போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் கடும் மோதல் வெடித்தது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். 800 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதில் பாதுகாப்பு படையினர் 180 பேரும் படுகாயமுற்றனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஈராக்கில் மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை - 26 பேர் பலி

Previous
« Prev Post