Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,politics,thinakkural,uthayan,srilankan tamil,jaffna,corona virus jaffna,jaffna news,jaffna sri lanka,jaffna news paper,jaffna phone shop,jaffna news today,jaffna tamil tv news,lanka,lankasri,parliament,today news sri lanka,tamilwin news,lankasri news,sri lanka latest news,sri lanka updates today,sri lanka current situation,news sri lanka,sri lanka tamil news

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 31 அக்டோபர், 2019

மிக சில மாதங்களில் 130,000 இற்கு அதிமான மக்களை எந்த மனித நாகரிகமும் இன்றி கொன்று போட்ட கோட்டாபய ராஜபக்சே-Channel 4 வெளியிட்ட ஆதாரம்!

  admin       வியாழன், 31 அக்டோபர், 2019


Channel 4 ஊடக நிறுவனம் 27 ஆம் திகதி ஆனி மாதம் 2011 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஒரு விபரண ஆவணத்தை ஒளிபரப்பியது .ஊடகவியலார் Jonathan Miller அவர்கள் தயாரித்த ஆவணத்தில் இலங்கை ராணுவத்தின் 58 ஆம் படை பிரிவில் இருந்த ஒருவர் வாக்குமூலம் வழங்கி இருந்தார் 

அந்த ஆவணத்தில் "பெர்னாண்டோ" குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்ட அந்த இராணுவ உத்தியோகத்தர் , இறுதி யுத்த களத்தில் இலங்கை ராணுவம் 

அப்பாவி  மக்களை சீரற்ற முறையில் சுட்டு கொன்றதை அம்பலப்படுத்தி இருந்தார்.  அப்பாவி பெண்களை  கற்பழித்தது,  பெண்களின் மார்பகங்களை துண்டித்து கொலை செய்த கோர சம்பவங்களை   கண்களால் கண்டதாக பகிரங்க படுத்தி இருந்தார் 

தலைகள் மற்றும்  உடலின் பிற பாகங்கள் இல்லாத பெண்களின் நிர்வாண இறந்த உடல்களை நான் கண்டேன் என அவர் வாக்குமூலம் வழங்கிய பொது அவரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. சிறிய, அப்பாவி குழந்தைகள் நிறைய எண்ணிக்கையில் கொல்லப்படுவதை நான் கண்டேன் என  அவர் Channel 4 நிறுவனத்திடம் சொன்னார்.  இரத்தத்தில் வெள்ளத்தில் புதைந்து போன அப்பாவிகள் பலரின் உடல்கள் சிதறி கிடந்தன என்றார் அவர் 

இலங்கை இராணுவம்  பொதுமக்களை சுட்டுக் கொல்வதை அவர் உண்மையில் பார்த்தாரா என்று கேட்டதற்கு, இலங்கை இராணுவம் சுடுவதை நான் பார்த்தேன். நான் அதை நேரடியாகப் பார்த்தேன். சாதாரண பொதுமக்கள் என் கண்களால் கொல்லப்படுவதை நான் கண்டேன் என பதிலளித்தார் அந்த இராணுவ அதிகாரி 

இந்த கொடூரங்களுக்கு பின்னணியில் இருந்த கோத்தபாயா ராஜபக்சே  "எந்த வகையிலும் பணியை முடிக்க" உத்தரவுகளைப் வழங்கி இருந்ததாக அவர் சொன்னார். 

The  witness, who was also operating with Brigadier Shavendra Silva’s 58 Division on the front line during the final assault, claims the Brigadier was ordered by the defence secretary “to finish the job by whatever means necessary.”

மிக சில மாதங்களில் 130,000 இற்கு அதிமான மக்களை எந்த மனித நாகரிகமும் இன்றி கொன்று போட்ட கோட்டாபய ராஜபக்சே என்கிற கொலையாளி தொடர்பாக  தெளிவான சாட்சியங்களும் சான்றுகளும் இருக்கிற போதும்  அதை எல்லாம் மறைத்து விட்டு அந்த கொடியவனுக்கு வாக்கு கேட்டு எங்களில் சிலரும் புறப்பட்டு இருப்பது  துயரத்தின் உச்சம்
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மிக சில மாதங்களில் 130,000 இற்கு அதிமான மக்களை எந்த மனித நாகரிகமும் இன்றி கொன்று போட்ட கோட்டாபய ராஜபக்சே-Channel 4 வெளியிட்ட ஆதாரம்!

Previous
« Prev Post