Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 28 செப்டம்பர், 2019

லெபனானில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறது இலங்கை அமைதி காக்கும் படையணி!

  admin       சனி, 28 செப்டம்பர், 2019


லெபனானில் அமைதி காக்கும் படையணியில் செயற்பட்டு வந்த இலங்கை இராணுவ அணி திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

இராணுவத்தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்ததால் அதிருப்தியடைந்த ஐ.நா, இலங்கை அமைதி காக்கும் படையணியில் 25 வீதமானவற்றை திருப்பி அனுப்பப் போவதாக அண்மையில் அதிரடியாக அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பின்படி, லெபனானில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவ வீரர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். வழக்கமாக, திருப்பியனுப்பும் வீரர்களிற்கு பதிலாக அந்த நாடே, புதிய அணிகளை நியமிப்பது வழக்கமாக இருந்தது. எனினும், இம்முறை திருப்பி அனுப்பப்படும் இலங்கை வீரர்களிற்கு பதிலாக இந்தோனேசிய இராணுவம் இணைக்கப்படுகிறது.

இதேவேளை, பிறநாடுகள் அமைதிப்பணியில் ஈடுபட தயங்கும் சூடான், மாலி ஆகிய பிரதேசங்களில் மட்டும் இலங்கையின் துருப்புக்கள் அமைதிப்பணியில் ஈடுபடுத்தப்படுவது குறித்த அதிருப்தியும் இலங்கையிடம் காணப்படுகிறது. அந்த நாடுகளில் நிலவும் ஆபத்தான நிலைமையினால், பல நாடுகள் அங்கு அமைதிப்படையை அனுப்ப தயங்கி வருகின்றன.

அங்குள்ள இலங்கை படையணிகள் தொடர்ந்து நிலைகொண்டிருக்கும்.

இதேவேளை, அமைதிப்படையணியை திருப்பி அனுப்புவது குறித்து இலங்கையின் வெளியுறவு செயலாளர் ரவிநாத் அரியசிங்க, ​​நேற்று ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைத் திணைக்களத்துடன் கலந்துரையாடல் நடத்தியிருந்தார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! லெபனானில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறது இலங்கை அமைதி காக்கும் படையணி!

Previous
« Prev Post