Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 26 செப்டம்பர், 2019

வடக்கு, கிழக்கில் உள்ள நீதிமன்றங்களை மூடுங்கள் – ஜனாதிபதிக்கு கடிதம்!

  admin       வியாழன், 26 செப்டம்பர், 2019


பௌத்த தேரர்கள் இலங்கை நீதிமன்றத்தின் கட்டளைகளை பின்பற்றமாட்டார்கள் என்றால், தமிழர் தாயகப்பகுதியில் நீதிமன்றங்கள் எதற்கு? அவற்றை மூடிவிடுங்கள் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இன்று (வியாழக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பௌத்த தேரர்கள் இலங்கை நீதிமன்றத்தின் கட்டளைகளை பின்பற்ற மாட்டார்கள் என்றால் தமிழர் தாயகப் பகுதியில் எதற்கு நீதிமன்றங்கள்? மூடிவிடுங்கள்.

வலுவற்ற வெற்று மன்றங்கள் எதற்கு? அதிகார வலிமையற்ற சாமானிய மக்களை துன்புறுத்துவதற்குதானா?

பௌத்தர்களே இலங்கையர்களாக சட்டவாக்கத்தை மதிக்காதபோது தமிழ் மக்கள் இலங்கையர்களாக வாழவேண்டும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கையானது.

இவ்வாறான வாதத்தால் சகிப்புத்தன்மை இழந்தே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நேரிட்டதை மறந்துவிட்டீர்களா?

யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகளாகியும் வடக்கு கிழக்கை இன்னொரு தேசமாகவே சிங்கள தேசம் பார்க்கின்றது. தமிழர்களும் உங்களுடன் சேர்ந்து வாழலாம் எனும் மனோ நிலையில் இல்லை .

கடந்த எழுபது ஆண்டுகளாகவே அடக்கு முறை தொடர்கிறது. வடக்கு, கிழக்கில் சட்டவிரோத விகாரைகள் அமைப்பதும் அதற்கு புதிய வரலாறுகள் கற்பிப்பதும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் செய்வதும் ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலே. இது ஒரு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு ஆகும்.

இன்றைய பௌத்தம் புத்தரின் தர்ம கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும். பௌத்த தேரர்கள் இலங்கையர்கள் இல்லையா? இலங்கையராக இருந்திருந்தால் நீதி மன்றை களங்கப்படுத்தியிருப்பார்களா? அல்லது தமிழ் நீதிபதிகளின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? முல்லைத்தீவில் இலங்கையின் நீதி மன்றம்தானே உள்ளது தமிழீழ நீதிமன்றம் இல்லைதானே!

நல்வழிப்படுத்த வேண்டிய சமயங்கள் மதம் பிடித்து சதியாட்டத்தில் ஈடுபடுகின்றன. தமிழர்கள் எக்காலத்திலும் இலங்கையை விசுவாசிக்க மாட்டார்கள் என்பதை அவ்வப்போது சிங்கள தேசமே உறுதிப்படுத்தி வருகின்றது.

எனவே சட்ட மீறலுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல்துறையை கொண்ட ஒரே நாடு உலகத்தில் இலங்கையே ஆகும் .

ஆகவே பௌத்த தேரர்களை தண்டிக்காத நீதிமன்றங்களும் காவல்துறையும் எதற்கு தமிழர் தாயகத்தில் அகற்றி விடுங்கள் எமக்கு அவசியமில்லை” என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! வடக்கு, கிழக்கில் உள்ள நீதிமன்றங்களை மூடுங்கள் – ஜனாதிபதிக்கு கடிதம்!

Previous
« Prev Post