Breaking News

வெற்றிபெற முடியாவிட்டால் ஒதுங்கிவிடுவேன்- ரணில்: கண்ணீர்விட்ட ஆதரவாளர்கள்!



கடினமாக காலங்களில் கட்சியை நான் பாதுகாத்து, இன்று கட்சி மேலுக்கு கொண்டு வந்திருக்கிறேன். வெற்றிபெற முடியுமென்றால் மாத்திரமே,ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன். இல்லையென்றால் அரசியலை விட்டு வெளியேறி விடுவேன்“ இப்படி ஐ.தே.கவின் பிரமுகர்கள் மத்தியில் உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க .

பியகம, களனி பகுதி கட்சி பிரமுகர்களை நேற்று சந்தித்தபோது, பிரதமர் இதனை தெரிவித்தார்.

கட்சியின் கடினமாக காலகட்டங்களில் கட்சிக்காக செயற்பட்டேன். கட்சியின் தலைவர்கள் ஒவ்வொருவராக மரணமடைந்தபோது, கட்சி கடினமான காலகட்டத்தை சந்தித்தது. அப்போதெல்லாம் கட்யின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய எனது செயற்பாடுகளை கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அறிவார்கள்.

அரசியல்ரீதியாக கட்சி வீழ்ச்சிகளை சந்தித்தபோது, மறுமலர்சிக்காக ஆக்கபூர்வமாக செயற்பட்டேன். கட்சி தலைவர் என்ற ரீதியில் ஐ.தே.க தலைமையிலான கூட்டணிகள் வெற்றிபெற கடந்த காலங்களில் தியாகங்களை செய்திருக்கிறேன். எதிர்காலத்திலும் எமது கட்சி, கூட்டணி வெற்றிபெற பொறுப்புணர்வுடன் செயற்படுவேன்.


 
எதிர்காலத்தில் ஐ.தே.க தலைமையிலான கூட்டணியை வெற்றிபெற செய்து, கட்சிக்கான எனது கடமையை செய்ய முடியாவிட்டால் வெளியேறிவிடுவேன். இது எனக்கு கடினமாக விடயமல்ல.

நாட்டுக்கு மட்டுமல்ல, ஐ.தே.கவிற்கும் அடுத்த ஜனாதிபதி தேர்தல் முக்கியமானது. தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகள், சர்வதேச ஒத்துழைப்பு என்பன நாட்டுக்கு அவசியமானது. அது தொடர வேண்டுமெனில் நாம் வெற்றிபெற வேண்டும்.

கூட்டணியை விரைவில் அமைத்து, ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைய தேவையான நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட போவதாக ரணில் தெரிவித்தார்.

கடந்தகாலத்தில் தான் எதிர்கொண்ட கடினமான காலங்களை ரணில் விபரித்தபோது, கூட்டத்திலிருந்த சில ஐ.தே.க மூத்த பிரமுகர்கள் கண்ணீர் சிந்தியுள்ளனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.