onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Sunday, September 1, 2019

மட்டுநகர் இளைஞர்களுக்கு வியாழேந்திரன் அவர்களின் அவசர தகவல் அதிகம் பகிருங்கள் !

  admin       Sunday, September 1, 2019


என் உயிருக்கும் மேலான மட்டு நகர் தமிழ்  உறவுகளே! சற்று கவனமாக இருங்கள். தமிழ் மக்கள் யாரும் எங்கள் நியாயமான போராட்டத்தை  கேவலப்படுத்தவில்லை. மாறாக சில தமிழ் அரசுக்கட்சி அரசியல் வாதிகள் தற்போது பல வீடுகளுக்கு,  இடங்களுக்குச் சென்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கு பொலிசில் முறைப்பாடு செய்யுமாறு தூண்டுகின்றனர். காத்தான்குடி வரை செல்கின்றனர்.  இதில் எம் மீதுள்ள பகையை தீர்ப்பதற்காக அப்பாவி தமிழர்களை பழிவாங்கும் படலம் நடைபெறுகிறது .  இதில் உறவுகளை இழந்த உறவுகளும் அடங்குவர். நீங்கள் இதில் என்ன பிரச்சினை வந்தாலும் என் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும் 0774595807. நான் உட்பட ஐவர் பொலிசாரால் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். காயப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தவர்களை (04) பொலிசார் இலகுவாக கைது செய்துள்ளனர்.நான்  சம்பவ இடத்திலிருந்து கடைசியாக வெளியேறினேன் . காரணம் ஒருவரும் கைது செய்யப்படக் கூடாது என்பதற்காக. சம்பவ இடத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. தற்போது மாநகர சபையில் உள்ள ஒருவரும், மற்றும் தமிழரசுக் கட்சி எம் பி ஒருவரினது ஆதரவாளரும் JVP போன்ற இணையத்தளங்களிலும், தங்களுக்கு சார்பான முகப்புத்தகங்ளிலும் பிழையான கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.  அதைப்பற்றி நான் கடுகளவும் கவலை கொள்ளவில்லை .இவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிக்கு நேரடியான ஆதரவாளர்கள் என்பது நூறு வீதம் உண்மையாகிறது.  உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடன் தொடர்பு கொள்ளவும். கிழக்குத் தமிழர்களின் இருப்பை பாதுகாக்க நாம்  தொடர்ந்து போராடுவோம். "போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும்" நன்றி .முற்போக்கு தமிழன்
 #வியாழேந்திரன்
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மட்டுநகர் இளைஞர்களுக்கு வியாழேந்திரன் அவர்களின் அவசர தகவல் அதிகம் பகிருங்கள் !

Previous
« Prev Post