onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Saturday, September 7, 2019

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பில் எந்த அவசரமும் கிடையாது!

  admin       Saturday, September 7, 2019


நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாம் யாரை ஆதரிப்பது தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கவில்லை. 2015 ஆம் ஆண்டுத் தேர்தலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி ஆதரவு வழங்கினோம். அது நடைபெறவில்லை. இனிவரும் தேர்தலிலும் அதற்கு முக்கியத்துவம் வழங்குவோம். ஆனால், யாரை ஆதரிப்பது என இன்னமும் முடிவெடுக்கவில்லை. ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவிக்கட்டும், அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடட்டும் அதன்பின்னர் முடிவெடுப்போம். எமக்கு எந்த அவசரமும் கிடையாது.

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன்.

இந்தியாவின் ‘த இந்து’ நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில், ”நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவீர்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயேஅவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் –

2015 இல் குறிப்பிட்ட வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரை ஆதரித்தோம். தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பது என்ற வாக்குறுதிகளுக்குப் புறம்பாக, நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைமையை ஒழிப்பது என்பதை அவர்கள் பிரதான வாக்குறுதியாகவும் அவர்கள் முன்வைத்தார்கள். 1994 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டுமக்கள் நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ஆணையைத் தொடர்ச்சியாக வழங்கி வந்திருந்த பின்னணியில் இரு கட்சிகளும் ஒன்றுசேர்ந்திருந்த போது நாம் மனப்பூர்வமாக அவர்கள் அந்த வாக்குறுதிகளை இத்தடவை நிறைவேற்றுவார்கள் என்று நம்பினோம்.

ஆனால் அது நடைபெறவில்லை. இப்பொழுது நாம் யாராவதொரு வேட்பாளரை அவர்கள் ஒழிப்பதாக முன்னர் உறுதியளித்த நிறைவேற்றதிகார ஜனாதிபதிப் பதவிக்கு ஆதரிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். இந்த நிகழ்வுத் திருப்பங்களை நாம் வேடிக்கையாக எடுத்துக்கொள்ளவில்லை. சகல கட்சிகளுமே அவற்றின் வேட்பாளர்களை நியமித்து விஞ்ஞாபனங்களை வெளியிடும் வரை நாம் காத்திருப்போம். வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தித் தீர்மானம் ஒன்றுக்கு வருவோம். எமக்கு அவசரமில்லை. – என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பில் எந்த அவசரமும் கிடையாது!

Previous
« Prev Post