Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் எச்சங்கள் காத்தான்குடியில் புதைக்கப்படுகிறது!

  admin       வெள்ளி, 27 செப்டம்பர், 2019


மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய முகமது ஆசாத்தின் மனித எச்சங்களை காத்தான்குடி மொஹிதீன் பள்ளிவாசல் மையவாடியில் புதைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

மனித வெடிகுண்டின் உடல் எச்சங்களை நேற்றைய தினத்திற்கு (26) முன்னர் பிரச்சனைகள் இன்றி புதைக்க வேண்டுமென்றும், அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும், மாவட்டத்தின் எந்த பகுதியிலும் மனித எச்சங்களை புதைக்க சம்மதம் கிடைக்காத நிலையில், இன்று காத்தான்குடியில் மனித எச்சங்கள் புதைக்கப்படவுள்ளது.

காத்தான்குடி 3, மொஹிதீன் பள்ளிவாசல் மையவாடியில் புதைக்கப்படவுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் எச்சங்கள் காத்தான்குடியில் புதைக்கப்படுகிறது!

Previous
« Prev Post