Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 28 செப்டம்பர், 2019

திடீர் திருப்பம்: சு.கவுடன் கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்தார் சஜித்!

  admin       சனி, 28 செப்டம்பர், 2019


ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு அழைப்பு அனுப்பியுள்ளார், ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச.

ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஊடாக, சு.க பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் சம்மத்துடனேயே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சஜித்திற்கு வேட்பமனு வழங்கியபோது, விதித்த நிபந்தனைகளில் ஒன்றாக- மைத்திரி தரப்புடன் கூட்டணி வைக்கக்கூடாது என்பதும் இருந்ததாக சில தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், அந்த தகவலில் உண்மையில்லையென்பதை பிந்தைய நிலைமை தெளிவுபடுத்தியுள்ளது.

சஜித்தும், தயாசிறியும் நேருக்குநேர் முதல் சுற்றுக்களில் பேசுவதென்றும், அது வெற்றியளித்தால், மைத்திரி- சஜித் நேரில் சந்தித்து பேசுவதென்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சு.க தரப்பினர் பொதுஜன பெரமுனவுடன் இணைவார்கள் என கருதப்பட்டு வந்த நிலையில், நேற்று மதியம் ஜனாதிபதி மற்றும் ராஜபக்ச சகோதரர்களிற்கிடையில் நடந்த பேச்சு தோல்வியில் முடிந்தது, சஜித் தரப்பை உற்சாகப்படுத்தியுள்ளது.

தாமரை மொட்டு சின்னம் அல்லாத வேறு ஒரு சின்னத்தில் களமிறங்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால வலியுறுத்தியபோதும், அதை ராஜபக்ச சகோதரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மஹிந்த, பசில், கோட்டாபய ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தாமரை மொட்டு அல்லத வேறொரு சின்னத்தில் களமிறங்கினால் மாத்திரமே தம்மால் ஆதரிக்க முடியுமென்றும், தமதுகட்சி சின்னத்தை ஜனாதிபதி தேர்தலில் கைவிடுவது அரசியல் தவறாக முடியுமென்றும், 1989ம் ஆண்டு அப்படி விட்ட அரசியல் தவறினால் பெரிய விளைவுகளை சந்தித்ததாக நேற்று மைத்திரி, மஹிந்த தரப்பிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாமரை மொட்டு அல்லாத பிறிதொரு சின்னத்தில் போட்டியிட்டால் மாத்திரமே கூட்டணியென்று, சு.க மத்தியகுழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சின்னத்தை மாற்ற மஹிந்த நேரடியாக மறுத்து விட்டார். இப்பொழுது சின்னத்தை மாற்ற தாமதமாகி விட்டது. தேர்தல் நெருங்கி விட்டது. அதனால் தாமரை மொட்டு சின்னத்திலேயே களமிறங்குவோம். தேவையெனில் நாடாளுமன்ற தேர்தலில் சின்னத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

நாளை- திங்கட்கிழமை- இரவு சு.க மத்திய குழு கூடி இது பற்றி ஆராய்ந்து பதிலளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால அவர்களிற்கு பதிலளித்துள்ளார்.

இதேவேளை, கடந்த செவ்வாய்கிழமை இரவும், மைத்திரி- கோட்டாபய சந்தித்து பேசியுள்ளனர். இதன்போதும், சின்னத்தை மாற்றுவது குறித்து மைத்திரி வலியுறுத்தியுள்ளார்.

இதன்பின்னர், இது குறித்து பெரமுன தனது கூட்டணி கட்சிகளுடன் ஆராய்ந்தபோது, சின்னத்தை மாற்றும் நடவடிக்கை தாமதமாகி விட்டதாக கூட்டணி தலைவர்கள் தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச ஆகியோரும் தெரிவித்திருந்தார்கள்.

சின்னம் குறித்த இழுபறியில் சு.க, பெரமுன சிக்கியுள்ள நிலையில், சு.கவின் ஆதரவை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்குமென சஜித் தரப்பு நம்புவதாக தெரிகிறது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! திடீர் திருப்பம்: சு.கவுடன் கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்தார் சஜித்!

Previous
« Prev Post