Breaking News

குடாநாடு முடங்கியது: எழுக தமிழிற்கு பேராதரவு



தமிழ் மக்களின் பல்வேறு அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து இன்று இடம்பெறும் எழுக தமிழ் பேரணிக்கு யாழ்க்குடாநாடு பேராதரவை வழங்கியுள்ளது.

யாழ் குடாநாட்டின் பிரதான நகரங்கள் அனைத்தும் செயலிழந்துள்ளன. பொதுப்போக்குரவத்து இடம்பெறவில்லை. காலையிலேயே குடாநாடு வெறிச்சோடி, தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்த வழமை மறுப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.

யாழ்குடாநாட்டின் பிரதான சந்தைகள் எதுவும் இன்று திறக்கப்பவில்லை. குடாநாட்டிற்கான பிரதான காய்கறி விநியோக சந்தைகளான மருதனார்மடம், திருநெல்வேலி சந்தைகளும் பூட்டப்பட்டுள்ளன.

பாடசாலைகள் இன்று வழக்கம் போல இயங்கும் என, “அழுத்தி வலியுறுத்தி“ அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தபோதும், மாணவர்கள் பாடசாலைக்கு செல்லவில்லை.

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அரச, தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை. தூர பிரதேச தனியார் பேருந்துகள் மட்டும் சேவையில் ஈடுபடுகின்றன.

No comments

Note: Only a member of this blog may post a comment.