Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 11 செப்டம்பர், 2019

யாழ் பல்கலைகழகத்தை முஸ்லிம் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு!

  admin       புதன், 11 செப்டம்பர், 2019


அமைச்சர் ஹக்கீமின் அரசியல் தலையீட்டுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, யாழ் பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டத்திற்குப் பூரண ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் செயலாளர் செல்வராச கஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

யாழ் பல்கலைக்கழத்திற்கு கல்வி சாரா ஊழியர்களை ஆட்சேர்த்துக் கொள்ளும் நடைமுறையை பக்கச் சார்பற்றதாகவும், அரசியல் தலையீடு அற்றவகையிலும் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக ஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு தெரிவித்துக் கொள்கின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊழியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதில் பக்கச் சார்புகளும் முறைகேடுகளும் நிலவுவதாகவும், அரசியல் தலையீடு காணப்படுவதாகவும் ஊழியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! யாழ் பல்கலைகழகத்தை முஸ்லிம் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு!

Previous
« Prev Post