Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 9 செப்டம்பர், 2019

மூன்று நிபந்தனையுடன் சஜித்தை வேட்பாளராக நியமிக்க ரணில் சம்மதம்!

  admin       திங்கள், 9 செப்டம்பர், 2019


நாளை காலை சஜித்துடனான சந்திப்பில் இந்த நிபந்தனைகளை ரணில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக சஜித் பிரேமதாச முதலில் அறிவித்தார். சில தினங்களின் முன்னர் கட்சியின் உள்ளக கூட்டத்தில், போட்டியிட ஆர்வமாக இருப்பதாக ரணில் அறிவித்திருந்தார். இந்த இழுபறியை தொடர்ந்து, பல்வேறு தரப்புக்களிலுமிருந்து வந்த அழுத்தங்களை தொடர்ந்து, ரணில் புதிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, சஜித்தை கட்சியின் வேட்பாளராக நிறுத்துவதெனில் மத்தியகுழு சம்மதிக்க வேண்டும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க அவர் ஒப்புக் கொள்ள வேண்டும், ஐக்கிய தேசியக்கட்சியுடன் கூட்டணி வைக்கும் அனைத்து கட்சிகளும் சஜித்தின் நியமனத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும், ஆகிய நிபந்தனைகளை சஜித்திற்கு நாளை ரணில் தெரிவிப்பார் என கூறப்படுகிறது.

இதேவேளை, கட்சியின் மத்திய குழுவில் ரணில் ஆதரவாளர்கள் அதிகமாக இருப்பதுடன், ஐ.தே.மு கூட்டணியிலுள்ள ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோர் சஜித்தை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மூன்று நிபந்தனையுடன் சஜித்தை வேட்பாளராக நியமிக்க ரணில் சம்மதம்!

Previous
« Prev Post