Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

கொழும்பில் அச்சத்தில் உறைந்துள்ள பிரபல வர்த்தகர்கள்!

  admin       ஞாயிறு, 29 செப்டம்பர், 2019


ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டநிலையில் , கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் மிரட்டி பணம் பறிக்கும் பாதாள உலக குழுவினர் மிகவும் சுறுசுறுப்பாகிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.,

இதனால் கடுவெல , ஹன்வெல,மற்றும் அதுருகிரிய பகுதிகளில் உள்ள வணிகர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்தப்பகுதிகளில் உள்ள வணிகர்கள் ஏற்கனவே இந்த குழுக்களுக்கு ஐம்பதாயிரம் முதல் ஏழு மில்லியன்வரை கப்பமாக செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சிறைகளில் உள்ள அங்கொட லொக்க ,உறு ஜூவா, கஞ்சிப்பான இம்ரான், மற்றும் மாக்கந்துரே மதூஷ் போன்றவர்களின் பெயரில் பாதாள உலக குழுவினர் இயங்கிவருவதாகவும் இந்த பாதாளஉலக குழு உறுப்பினர்கள் வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தமது தலைவர்களை சிறைகளில் இருந்து விடுவிக்க கப்பம் கோருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டால் அவர்களது பிள்ளைகள் கடத்தப்படுவர் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்படுவர் எனவும் அச்சுறுத்தப்படுகின்றனர்.இதனால் அவர்கள் கேட்கும் கப்பத்தை செலுத்தும் வர்த்தகர்கள் அதனை செலுத்திவிட்டு மௌனமாக இருக்கின்றனர்.

இதேவேளை இந்த மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப்படை அநாமதேய தொலைபேசி அழைப்புகளைப் பெற்று வருவதாகவும், பொலிஸில் நம்பிக்கை இல்லாதவர்கள் தமது அடையாளங்களை வெளிப்படுத்த அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கொழும்பில் அச்சத்தில் உறைந்துள்ள பிரபல வர்த்தகர்கள்!

Previous
« Prev Post