Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 25 செப்டம்பர், 2019

ஆடுமேய்க்கச் சென்ற தமிழ்மகனுக்கு நேர்ந்த கொடுமை! பதறும் மனைவி

  admin       புதன், 25 செப்டம்பர், 2019


அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நேருபுரம் தாண்டியடி மயானப் பிரதேசத்தில் ஆடுகள் மேய்க்க சென்ற 65வயது முதியவர் தலையின்றி சடலமாக இன்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக காணப்பட்ட முதியவர் தாண்டியடி நேருபுரம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான மாரிமுத்து முனிசாமி (வயது 65) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று செவ்வாய்க்கிழமை(24) காலை 8.30 மணியளவில் வீட்டில் இருந்து ஆடுகளை மேய்ப்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளதுடன் மதிய உணவுக்கு வரமுடியாது மாலை 4.00 மணிக்கு வீட்டுக்கு வருவதாக அவரது மனைவி அறுமுகம் பார்வதியிடம் தெரிவித்து சென்றநிலையில் தலையின்றி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்..

குறித்த நபர் தாண்டியடி மயானப் பிரதேசத்தில் வைத்து சிறிய கட்டையினால் தாக்கப்பட்டு கத்தியால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபரின் தலை உடலில் இருந்து அகற்றப்பட்டு தலையின்றி உடல் மாத்திரம் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

முதியவரின் சடலத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் கத்தியும், தண்ணீர் போத்தலும் ஒரு துவிச்சக்கரவண்டியும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் திருக்கோவில் பொலிசார் தலையையும் குற்றவாளிகளையும் தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஆடுமேய்க்கச் சென்ற தமிழ்மகனுக்கு நேர்ந்த கொடுமை! பதறும் மனைவி

Previous
« Prev Post