onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Monday, September 9, 2019

இலங்கையில் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற வினோதம் ; சினிமாவை மிஞ்சிய சம்பவம்

  admin       Monday, September 9, 2019


மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியர் போல் வேடமிட்டு வைத்தியசாலைக்கு செல்வதை சினிமாவில் பார்த்ததுண்டு.

ஆனால் இது போன்ற உண்மைச் சம்பவம் ஒன்று இலங்கையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் வைத்தியரைப் போல நடித்து வந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட நபர் திக்வெல்ல-பதீகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவரிடமிருந்து வைத்தியர்கள் உபயோகிக்கும் ஒரு குழாய், தினப்பதிவேடு மற்றும் கையடக்க தொலைபேசி ஆகிய கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட போதே இவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! இலங்கையில் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற வினோதம் ; சினிமாவை மிஞ்சிய சம்பவம்

Previous
« Prev Post