Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 26 செப்டம்பர், 2019

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரித்தது!

  admin       வியாழன், 26 செப்டம்பர், 2019


அனைத்து அரசு ஊழியர்களின் மாத சம்பளம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட சம்பள ஆணைக்குழுவின் பரிந்துரையின் படி 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 3,000 ரூபா முதல் 24,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பையடுத்து அரச சேவையின் பல்வேறு துறைகளில் காணப்பட்ட சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கக்கூடும் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச துறையில் அனைத்து ஊழியர்களினதும் சம்பளம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மேலும் அதிகரிக்கும் நிலையில், விசேடமாக ரயில் மற்றும் தபால் சேவைகளில் உள்ள சம்பள முரண்பாடுகள் இதனூடாக தீர்க்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரச ஊழியர் ஒருவரின் அடிப்படை சம்பளமானது, 2015 ஆம் ஆண்டில் அவரது அடிப்படை சம்பளத்தில் 107 சதவீத சம்பள அதிகரிப்பாகும். இதன்படி 11730 ரூபா சம்பளத்தை பெற்றவர், புதிய திட்டத்தின்படி 24230 சம்பளத்தை பெறுவார்.

அதேவேளை, 11 இலட்சம் ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவையும் பெறுவார்கள்.

சம்பள முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்கு தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு 11 பேர் அடங்கிய சம்பள மறுஆய்வு ஆணைக்குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரித்தது!

Previous
« Prev Post