onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Thursday, September 5, 2019

தமிழ் அரசியல் தலைமைகள் அவர்அவர் வீடுகளைத்தான் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள் ஆனால் சிங்களத் தலைமையைப் பாருங்கள்.

  admin       Thursday, September 5, 2019


(#தவறுகள் உதாரணத்துடன் #சுட்டிக்காட்டப்படுகின்றனவே தவிர நான் யாருக்காகவும் #வக்காளத்து வாங்கவில்லை) 

நாமல் ராஜபக்ச அவர்கள் தன்னுடைய தொகுதியில் செய்யக்கூடிய பயிர்ச்செய்கைகளை கண்டறிந்ததுடன், அதனை வளர்த்தெடுக்க ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக  முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகளை முன்னெடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

அங்குனகொலபெலஸ்சை பிரதேசத்தில் வெற்றிலை & பூக்கள் பயிர்ச்செய்கைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி இன்று அறுவடையும் செய்துள்ளனர். முதலாவது அறுவடையை நாமல் ராஜபக்ச அவர்களுக்கு அம் மக்கள் சமர்ப்பணம் செய்துள்ளனர். நாமல் ராஜபக்சவின் இவ் நடவடிக்கையால் "அங்குனகொலபெலஸ்சை பிரதேச சபை" சிறுபயிர் ஏற்றுமதி வலையமாக மாற்றமடைந்துள்ளதுடன் மிக விரைவில் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த மக்களை கொண்டுள்ள பிரதேசமாக மாறவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழர், தமிழ் என அரசியலை முன்னெடுத்து 15க்கும் அதிகமான உறுப்பினர்களை தன்னகத்தே வைத்திருந்தும் இவ்வாறான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதா என தமிழர்கள் அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். 

1980களிற்கு முன்னர் "கிளிநொச்சி" பொருளாதரத்தில் முன்னேறிய மாவட்டமாக திகழ்ந்தது. முழு இலங்கைக்குமான வாழைப்பழ உற்பத்தி மிக அமோகமாக கிளிநொச்சியில் காணப்பட்டது. இன்றைய "தம்புள்ளை சந்தை போல" வார சந்தைகள் ஊடாக முழு இலங்கையையும் தன்னகத்தே வைத்திருந்த கிளிநொச்சி மாவட்டம் இன்று இலங்கையிலையே மிகவும் வறுமையான மாவட்டமாக காணப்படுகிறது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் சரி ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்னெடுத்து இருந்தால் இவ்வாறான நிலை தமிழ் மக்களுக்கு வந்திருக்காது என்பதை சிந்திப்பவர்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

இனிவரும் காலங்களில் சரி ஆக்கபூர்வமான அரசியல் தலைவர்களை தமிழர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் இல்லை எனில் இவ் நாட்டில், தமிழர்கள் போட்டியிடும் சமுகமாக திகழ முடியாத அவல நிலையே தொடரும்..
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! தமிழ் அரசியல் தலைமைகள் அவர்அவர் வீடுகளைத்தான் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள் ஆனால் சிங்களத் தலைமையைப் பாருங்கள்.

Previous
« Prev Post