Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 28 செப்டம்பர், 2019

இலங்கையில் புலிகளால் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் குறித்து ஐ.நாவில் பேசிய முக்கிய நாடொன்றின் பிரதமர்

  admin       சனி, 28 செப்டம்பர், 2019


2001க்கு முன்பு பெரும்பான்மையான தற்கொலை தாக்குதல்களை இந்துக்களாக இருந்த விடுதலை புலிகளால் நடத்தப்பட்டது. தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் பேசும் போசு இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெரிய தொகை ஏழை நாடுகளை விட்டு வெளியேறி உலகின் பணக்கார நாடுகளை அடைகிறது, இது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை விரிவுபடுத்துகிறது.

செப்டம்பர் மாதம் 11ம் திகதி 2001ம் ஆண்டு நடந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய எதிர்ப்பு அதிகமாகிவிட்டது. அது ஏன் தொடங்கியது?

ஏனென்றால் சில மேற்கத்திய தலைவர்கள் பயங்கரவாதத்தை இஸ்லாத்துடன் ஒப்பிட்டு, இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் தீவிர இஸ்லாம் என்று அழைத்தனர்.

தீவிர இஸ்லாம் என்றால் என்ன? ஒரே ஒரு இஸ்லாம் மட்டுமே உள்ளது, தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது.

இந்த இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்வதும் இஸ்லாமிய அச்சுறுத்தலுக்கு முக்கிய காரணம். இது இஸ்லாமியர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் செப்டம்பர் 2001க்கு முன்பு பெரும்பான்மையான தற்கொலைத் தாக்குதல்களை இந்துக்களாக இருந்த தமிழ் புலிகளால்(விடுதலை புலிகளால்) நடத்தப்பட்டது.

அப்போது இந்து மதத்தை யாரும் குறை கூறவில்லை. அது மிகவும் சரியானது. இலங்கையில் நம்பிக்கை இழந்த மக்கள் செய்த விஷயங்களுக்காக இந்து மதத்தை எப்படி தொடர்புபடுத்த முடியும்?

எனவே தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. மேற்கு உலகம் இஸ்லாம் குறித்து தவறான புரிதலை கொண்டுள்ளது. இஸ்லாமிய தீவிரவாதம் என்று வெறுப்பு உருவாக்கப்படுகிறது" இவ்வாறு கூறினார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! இலங்கையில் புலிகளால் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் குறித்து ஐ.நாவில் பேசிய முக்கிய நாடொன்றின் பிரதமர்

Previous
« Prev Post