Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

இன்று யாழில் தொடங்குகிறது என்ரபிறைஸ் சிறிலங்கா கண்காட்சி: நீங்கள் பெறக்கூடிய கடன்கள், வட்டி வீதம் தெரியுமா?

  admin       வெள்ளி, 6 செப்டம்பர், 2019


இலங்கை தொழில் நிறுவன (என்ரபிறைஸ் சிறிலங்கா) மூன்றாவது தேசிய கண்காட்சி இன்று யாழில் பிரதமரால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதில் கலந்து கொண்டு சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் இந்தக்கண்காட்சியிலும் நடமாடும் சேவையிலும் பங்குபற்றி இதன் உச்ச பயன்பெற்றுக்கொள்ள வேண்டுமென யாழ் வணிகர் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து வணிகர் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்-

இலங்கை தொழில் நிறுவன (என்ரபிறைஸ் சிறிலங்கா) மூன்றாவது தேசிய கண்காட்சியானது 07-10 செப்ரம்பர் 2019 வரையான காலப்பகுதியில் யாழ் முற்றவெளி மைதானத்தில் இலங்கை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் நடாத்தப்படவுள்ளது.

இலங்கை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி பின்வரும் சேவைகளை மேற்படி கண்காட்சியில் பொதுமக்களுக்கு வழங்கவுள்ளது.

1.சிறிய மற்றும் நடுத்தர மக்களுக்கான குறைந்த வட்டியிலான கடன் திட்டங்கள். இக் கடன் திட்டமானது பல வகைப்படும்.

 மாத்ய அருண – ஊடகவியலாளர்களுக்கு ஊடக உபகரணங்களை கொள்வனவு

செய்வதற்கான கடன் திட்டம். (இக்கடன் திட்டத்தில் வங்கி வட்டி 13.86மூ இதில ;

உங்களுக்காக 13.86% முழு வட்டியையும் அரசாங்கம் செலுத்தும்)

 திரி சவிய – பண்ணை விலங்குகள் மற்றும் சுயதொழில் செய்வதற்கான கடன்திட்டம்.

(இக்கடன் திட்டத்தில் வங்கி வட்டி 13.86%. இதில் உங்களுக்காக 13.86% முழு

வட்டியையும் அரசாங்கம் செலுத்தும்)

 ஏரம்பும – பட்டதாரிகளுக்கான கடன் திட்டம். (இக்கடன் திட்டத்தில் வங்கி வட்டி 13.86%. இதில் உங்களுக்காக 13.86% முழு வட்டியையும் அரசாங்கம் செலுத்தும்)

 ரிய சக்தி – பாடசாலை வேன் சேவை நடத்துபவர்களுக்கு பஸ் வாங்குவதற்கான

கடன்திட்டம். (இக்கடன் திட்டத்தில் வங்கி வட்டி 13.86%. இதில் உங்களுக்காக அரசாங்கம் செலுத்தும் மானிய வட்டி 75%. நீங்கள் செலுத்தும் வட்டி 3.46%)

 கொவி நவோதா – சிறு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் விவசாய

செயற்பாடுகளுக்கான இயந்திரங்கள் வாங்குவதற்கான கடன்திட்டம். (இக்கடன் திட்டத்தில் வங்கி வட்டி 13.86%. இதில் உங்களுக்காக அரசாங்கம் செலுத்தும் மானிய வட்டி 75%. நீங்கள் செலுத்தும் வட்டி 3.46%)

 ரன் அஸ்வென்ன – சிறு விவசாயிகள், விவசாய சங்கங்கள், அலங்கார மலர்ச்

செய்கையாளர்கள், அலங்கார மீன் வளர்ப்பு கைத்தொழிலில் ஈடுபடும் வியாபாரிகளுக்கான கடன்திட்டம். (இக்கடன் திட்டத்தில் வங்கி வட்டி 13.86%. இதில் உங்களுக்காக அரசாங்கம் செலுத்தும் மானிய வட்டி 50%. நீங்கள் செலுத்தும் வட்டி 6.93%)

 ஜய இசுர – சிறு வியாபாரங்களில் ஈடுபடுபவர்களுக்கான கடன்திட்டம். (சிறிய மற்றும் நடுததர அளவிலான வியாபாரங்கள்) (இக்கடன் திட்டத்தில் வங்கி வட்டி 13.86%. இதில் உங்களுக்காக அரசாங்கம் செலுத்தும் மானிய வட்டி 50%. நீங்கள் செலுத்தும் வட்டி 6.93%)

 பசுமைக்கடன் 1 – உக்கும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பொதியிடும் பொருட்களை உற்பத்தி செய்வோர், சிறிய அளவிலான சுற்றுலா சேவை, சேதன உர உற்பத்தி மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கான கடன்திட்டம். (இக்கடன் திட்டத்தில் வங்கி வட்டி 13.86%. இதில் உங்களுக்காக அரசாங்கம் செலுத்தும் மானிய வட்டி 50%. நீங்கள் செலுத்தும் வட்டி 6.93%)

 பசுமைக்கடன் 2 – சுற்றுலா விருந்தோம்பல் வீடுகளை நடத்திச் செல்பவர்கள் (guest house) மற்றும் நடத்த எதிர்பார்ப்பவர்களுக்கான கடன்திட்டம். (இக்கடன் திட்டத்தில் வங்கி வட்டி 13.86%. இதில் உங்களுக்காக அரசாங்கம் செலுத்தும் மானிய வட்டி 50%. நீங்கள் செலுத்தும் வட்டி 6%)

 ரிவி பல சவி – வீடுகளுக்கான சூரிய மின் கட்டமைப்புக்கான கடன்திட்டம். (இக்கடன் திட்டத்தில் வங்கி வட்டி 13.86%. இதில் உங்களுக்காக அரசாங்கம் செலுத்தும் மானிய வட்டி 50%. நீங்கள் செலுத்தும் வட்டி 6.93%)

 சொந்துரு பியச – சிறு வீட்டு உரிமையாளர்களுக்கான கடன்திட்டம். (இக்கடன் திட்டத்தில் வங்கி வட்டி 13.86%. இதில் உங்களுக்காக அரசாங்கம் செலுத்தும் மானிய வட்டி 50%. நீங்கள் செலுத்தும் வட்டி 6.93%) போன்றனவாகும்

மேலும் இக்கடன் திட்டத்தை விண்ணப்பிக்காதவர்களுக்கும் விண்ணப்பித்தும் கடன் உதவி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கும் குறைந்த வட்டியிலான கடன் திட்டங்கள் ஏற்றதாக இருக்கும்.

2. நாணயக்குற்றி விநியோகம்.

அனைத்து வகையான நாணயங்களையும் உங்கள் தேவைக்கேற்றளவு இக்கண்காட்சியில் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

3. வேண்டுமென்றே சேதமாக்கப்பட்ட மற்றும் பழுதடைந்த நாணயத்தாள் மாற்றம். 

சேதமடைந்த அனைத்து நாணயத் தாள்களையும் இங்கு புதியதாக மாற்றிக் கொள்ளலாம்.

4. ஊழிய சேமலாப நிதியம் தொடர்பான சேவைகள்.

பெயரில் ஏற்பட்ட பிழைகள் மற்றும் அடையாள அட்டை இலக்கங்களில் ஏற்பட்ட பிழைகள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இறந்தவர்களின் ஊழிய சேமலாப நிதியைப் பெற்றுக்கொள்வது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

5.இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளின் விற்பனை.

6.நிதி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவை.

7.இதர சேவைகள்.

இக்கண்காட்சியில் நிதி அமைச்சைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், மத்திய வங்கியின்

உயர்அதிகாரிகள், ஊழிய சேமலாப நிதியத்தின் உயர் அதிகாரிகள் போன்ற முடிவெடுக்கக்கூடிய உயர்தரத்தினைச் சேர்ந்தவர்கள் கண்காட்சியிலும், நடமாடும் சேவையிலும் பங்குபற்ற இருப்பதனால் உங்கள் பிரச்சினைகள் சம்மந்தமான சகல விடயங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆகவே சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் இந்தக்கண்காட்சியிலும் நடமாடும் சேவையிலும் பங்குபற்றி இதன் உச்ச பயன்பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் வடமாகாணத்தை ஒரு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய இந்த கண்காட்சியும், நடமாடும் சேவையும் பெரிதும் வழிவகுக்குமென எதிர்பார்க்கின்றோம்.

எனவே வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் நடாத்தப்படவுள்ள இக்கண்காட்சியில் பங்குகொண்டு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு யாழ் வணிகர் கழகம் கேட்டுக்கொள்கின்றது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! இன்று யாழில் தொடங்குகிறது என்ரபிறைஸ் சிறிலங்கா கண்காட்சி: நீங்கள் பெறக்கூடிய கடன்கள், வட்டி வீதம் தெரியுமா?

Previous
« Prev Post