Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

கைது செய்யப்படுவாரா கோட்டா...? மறைமுகமாக காய் நகர்த்துகிறாரா பிரதமர் ரணில்...?

  admin       வெள்ளி, 13 செப்டம்பர், 2019


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான முயற்சியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக மேற்கொண்டிருப்பதாக தாய்நாட்டிற்கான இராணுவத்தினர் என்கிற அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பல்வேறு அதிகாரிகளும் கைது செய்து சிறை வைக்கப்பட்டதாலேயே உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை தடுக்க முடியாமற் போனதாகவும் குற்றம்சாட்டியுள்ள தாய்நாட்டிற்கான இராணுவத்தினர் அமைப்பின் ஏற்பாட்டாளரான சட்டத்தரணி அஜித் பிரசன்ன, தற்போது நாட்டை பாதுகாக்கக்கூடிய தலைவரான கோட்டாபயவையும் கைது செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவித்தார்.

ஊடகவியலாளர் படுகொலை மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஸ்ரீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் கட்டளைத் தளபதிகள் உட்பட புலனாய்வாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் பலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல கொழும்பில் 05 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கடற்படை புலனாய்வு பொறுப்பதிகாரிகள் உட்பட கடற்படை புலனாய்வாளர்கள் பத்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களுடன் பிரதான சந்தேகநபர் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றத்திற்காக தற்போதைய முப்படைகளின் பிரதானியும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இராணுவத்தைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் அரசியல்வாதிகளினதும், அதிகாரிகளினதும் தனிப்பட்ட தேவைகளுக்காக படுகொலைகள், ஆட்கடத்தல்களில் தொடர்புபட்டிருப்பதுடன், கப்பம் கோரல் உட்பட பணம் சம்பாதிப்பதற்காக ஆட் கடத்தல்களிலும் ஈடுபட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இராணுவப் புலனாய்வு சேவையின் ஆய்வாளரான கலாநிதி அஜித் கொலன்னே அண்மையில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த நிலயில் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்சவின் மிக நெருங்கிய சகாவாக இருந்த கலாநிதி அஜித் கொலன்னே தற்போது கோட்டாபயவிற்கு எதிராகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகிவரும் நிலையிலேயே இந்தத் தகவல்களைத் தெரிவித்திருந்தார்.

எனினும் சிறிலங்காவின் தேசிய புலனாய்வு ஆய்வுத்துறையின் முன்னாள் தலைவர் கலாநிதி அஜித் கொலன்னேயின் இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்துள்ள கோட்டாபய ராஜபக்சவின் மற்றுமொரு விசுவாசியான தாய்நாட்டிற்கான இராணுவத்தினர் என்கிற அமைப்பின் ஏற்பாட்டாளரும், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியுமான சட்டத்தரணி அஜித் பிரசன்ன, ஒட்டுமொத்த சி.ஐ.டி யினரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கைகூலிகளாக செயற்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனாலேயே ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய சீ.ஐ.டி யினர் பல்வேறு விதத்திலும் முயற்சித்து வருவதாகவும் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த டேஜர் அஜித் பிரசன்ன குற்றம்சாட்டியுள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கைது செய்யப்படுவாரா கோட்டா...? மறைமுகமாக காய் நகர்த்துகிறாரா பிரதமர் ரணில்...?

Previous
« Prev Post