Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 30 செப்டம்பர், 2019

தர்க்ஷனை திட்டமிட்டு பழிதீர்த்த முக்கிய குழு? கசியும் ஆதாரங்கள்...!

  admin       திங்கள், 30 செப்டம்பர், 2019


அன்று ஈழ மக்களை இராணுவம் கொன்றழித்தது. இன்று ஈழ மகனின் முதுகில் குத்தி

எமக்கு ஆழமான வலியை இந்த பிக் பாஸ் 3கொடுத்திருக்கின்றது.

தோல்விகளும் துரோகங்களும் எங்களுக்கு பழகி போனதுதான். வலிகள் ஆறாத ரணத்தில் அமிலம் ஊற்றி மகிழ்கிறதா இந்த பிக்பாஸ். ஏற்க முடியவில்லை இந்த பச்சை துரோகத்தை, குறித்த தென்னிந்திய தொலைக்காட்சியில் ஈழமக்களை எப்போதும் முன்னிலை படுத்தமாட்டார்கள் எனும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்த வண்ணமேதான் உள்ளது.

முதலில் சூப்பர் சிங்கர் யாசிக்கா.. தற்பொழுது தர்க்ஷன். அவ்வளவே..

இந்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் தர்க்ஷன் வெளியேற்றப்பட்டமைக்கு கவலை வெளியிட்டுள்ளதோடு குறித்த தொலைக்காட்சியின் நடவடிகைக்கு கண்டமும் தெரிவித்துள்ளனர்.

ஈழத்தமிழனை ஏற்றெடுக்காத தமிழ்நாட்டு தமிழர்கள் , சரியான முறையில் தனது நன்னடைத்தைகளை கொண்டிருந்தும் கூத்தாடிகளுக்கு மட்டுமே சந்தர்ப்பங்களை வழங்கியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த சாதாரண பிக்பாஸ் க்ஷோவில்கூட ஒரு நல்ல மனிதனை தேர்ந்தெடுக்க தெரியாத நீங்கள் தானா நல்ல ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க போகிறிர்கள் தமிழ் நாட்டில் என்றும் சரமாரியாக கேள்விகளையும் தொடுத்துள்ளனர்.

இந்த நேரத்தில் நாமும் ஒன்றை கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். ஏன் எந்த ஈழத்தமிழரிற்குமே வளம் இல்லையா , அறிவில்லையா? உங்கள் திறமைகளை தென்னிந்திய தொலைக்காட்சிகளில் தான் சென்று நிரூபித்தாகவேண்டுமா? ஈழத்தமிழர்கள் மட்டும் இல்லை என்றால் இந்தியாவில் மட்டுமே அவர்கள் தங்கள் குப்பைகளை கொட்டமுடியும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

உலகளவில் குறித்த தொலைக்காட்சியினை விரும்பி பார்ப்பவர்களில் பலர் நம் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமே. இனியாவது உங்களின் முட்டாள் அறிவிற்கு எட்டட்டும்.

உங்கள் பிள்ளைகளிடம் திறமை இருந்தால் அதனை நீங்கள் இருக்கும் இடங்களில் அதனை அரங்கேற்றுவதற்கான சந்தர்ப்பத்தினை உருவாக்குங்கள். எவ்வளவோ கிராமிய கலைகள் தெரிந்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்களிற்கான சந்தர்பங்களை வழங்குங்கள் நீங்கள் வாழ்கின்ற இடங்களிலேயே.

அதனைவிடுத்து தென்னிந்தியா சென்றுதான் உங்கள் பிள்ளைகளின் திறமைகளை வெளிகொணர வேண்டும் என்கின்ற எண்ணத்தினை வருங்காலங்களில் என்றாலும் மாற்றிக்கொள்ளுங்கள்.

உண்மையிலேயே தர்க்ஷனை நினைத்து ஈழதமிழர்கள் எல்லோரும் பெருமைப்பட வேண்டும். எந்தவொரு பின்னனியும் இல்லாமல் அவன் சாதித்து காட்டியுள்ளான். ஈழதமிழர்களிற்கே உரிய நெஞ்சுரம் அவனிடத்தில் நிறையவே காணப்படுகின்றது. தன்மானத்தமிழனாக அவன் தன்னை நிரூபித்து விட்டே பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ளான். அவன் தமிழீழ மண் பெற்றெடுத்த புதல்வன் என்பதில் யாம் பெருமை கொள்வோம்.

இந்த வேளையில் இன்னுமொரு விடயத்தையும் நாம் கூறியாக வேண்டும். பிக்பாஸில் இருந்து தர்சன் முக்கியமாக வெளியேற்றபட வேண்டுமென ஆரம்பத்தில் இருந்தே வனிதா விஜயகுமார், மற்றும் மோகன்வைத்தியா ஆகியோர் முன்னின்று செயல்பட்டு வந்தவர்கள். தர்க்ஷனை சீண்டுவதுதான் அவர்களின் மிகப்பெரும் வேலையாக இருந்தது அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்வரை. குறித்த இருவரின் அழுத்தம் காரணமாகவே பிக்பாஸும் தர்சனை வெளியேற்றியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இதேவேளை நம் ஈழத்தமிழ் நாட்டில் இருந்து தென்னிந்தியாவிற்கு சென்ற பாலுமகேந்திரா மறைந்துவிட்டாலும் அவர் தயாரித்த பல படங்கள் அவர் அறிமுகப்படுத்திய பிரலங்கள் இன்றளவும் அவரின் பெயர் தாங்கியே தென்னிந்திய திரையுலககில் நிற்கின்றதென்றால் அது ஒன்றும் பொய்யில்லை.

சுடச்சுட வைரமாகும் கரிபோல அவமானங்கள் தோல்விகள் இவற்றினைக்கண்டு ஈழத்தமிழர்கள் துவண்டுவிட மாட்டார்கள் என்பது மட்டும் நிஜம்....!


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! தர்க்ஷனை திட்டமிட்டு பழிதீர்த்த முக்கிய குழு? கசியும் ஆதாரங்கள்...!

Previous
« Prev Post