onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Tuesday, September 3, 2019

ஈஸ்டர் தாக்குதலில் மனைவியை இழந்த பிறகும் இலங்கை மீதுள்ள காதலை விடாத அமெரிக்க பிரஜை!

  admin       Tuesday, September 3, 2019


அமெரிக்க பிரஜையான லுவிஸ் எலன், இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவராவார்.

மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள லுவிஸ் எலன், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இலங்கைக்கு வருகை தருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இலங்கையில் லுவிஸ் எலனுக்கு பல நெருங்கிய நண்பர்கள் இருக்கின்றனர்.

இவர், இரத்தினபுரி வைத்தியசாலையின் சிறுவர் பிரிவிற்கான கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.

2017ஆம் ஆண்டு இரத்தினபுரி வைத்தியசாலையின் கட்டடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வின் போது, லுவிஸ் எலனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கௌரவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறையை கழிப்பதற்காகவும், வைத்தியசாலையின் கட்டட நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காகவும் லுவிஸ் எலன், நெதர்லாந்து பிரஜையான தனது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் இலங்கை வந்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் தனது மனைவி மற்றும் மகன்கள் காலை உணவை உட்கொண்டிருந்த தருணத்திலேயே, அந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் லுவிஸ் எலனின் மனைவியான மோனிகா உயிரிழந்தார்.

உயிரிழந்த லுவிஸ் எலனின் மனைவி மோனிகாவின் இறுதிக் கிரியைகள் இரத்தினபுரியிலுள்ள அவரது நண்பரின் வீட்டில் நடத்தப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் லுவிஸ் எலன், கடந்த 29ஆம் தேதி மீணடும் இலங்கைக்கு வருகைத் தந்தார்.

கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்ற 2019ஆம் ஆண்டு சர்வதேச மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரண கண்காட்சியின் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதற்காகவே அவர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

தனது நண்பர்களின் ஏற்பாட்டில் நடைபெறுகிற இந்த கண்காட்சிக்காக, ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த தனது ஒரு மகனுடனேயே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

“இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை நான் இலங்கைக்கு வருகை தருவேன். எனினும், இந்த முறை கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. வீட்டில் உள்ளவர்களுடன் காலத்தை கடத்தி வந்தேன். இலங்கைக்கு மீண்டும் வருகை தர வாய்ப்பு கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும், கொஞ்சம் மன கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது.” என அவர் குறிப்பிட்டார்.

“நான் விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்து பார்த்ததும், வாகன நெரிசல் மற்றும் மக்கள் வேலை செய்வதை பார்த்ததும், இலங்கை மக்கள் முன்னோக்கி செல்வதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்” என அவர் கூறினார்.

தனது மனைவிக்கு செய்யும் கௌரவமாக, இரத்தினபுரி வைத்தியசாலையின் கட்டடத் தொகுதிக்கு மோனிகா எலன் என பெயர் வைக்க எதிர்பார்த்துள்ளதாக லுவிஸ் எலன் கூறியுள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஈஸ்டர் தாக்குதலில் மனைவியை இழந்த பிறகும் இலங்கை மீதுள்ள காதலை விடாத அமெரிக்க பிரஜை!

Previous
« Prev Post