onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Friday, September 13, 2019

பேஸ்புக் பயன்படுத்துபவரா நீங்கள்...? அவ்வாறாயின் இது உங்களுக்கான எச்சரிக்கை செய்தி!

  admin       Friday, September 13, 2019


ஹிக்கடுவை தொடரூந்து நிலையத்திற்கு அருகில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் 120 போதை மாத்திரைகளுடன் நேற்று இரவு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக் விருந்துபசாரத்திற்காக போதை மாத்திரைகளை விநியோகித்த போதே மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெல முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போது எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட சிற்றூர்தியில் ஹிக்கடுவை பகுதியில் ஏற்பாடு செய்யப்படும் பேஸ்புக் விருந்துபசாரங்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கும் விநியோகிப்பதற்காக இவர்கள் போதை மாத்திரைகளை கொண்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அண்மைக்காலங்களாக பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்களில் பெரும்பாலான இளைஞர் யுவதிகள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! பேஸ்புக் பயன்படுத்துபவரா நீங்கள்...? அவ்வாறாயின் இது உங்களுக்கான எச்சரிக்கை செய்தி!

Previous
« Prev Post