Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற குண்டு தாக்குதலின் முதல் குற்றவாளி பிரதமர் ரணிலே; ரணிலுக்கு பின்னரே சஹரான் குழு!

  admin       வெள்ளி, 13 செப்டம்பர், 2019


ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு பின்னர் மைத்ரி – மஹிந்த அணியில் இணைந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச, ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற நிலைமையே தொடர்வதாக கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்...

‘இந்த நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று இல்லை என்பதற்கு ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் சிறந்த உதாரணமாகும். இவ்வாறு தாக்குதல் ஒன்று இடம்பெறுவதற்கான திட்டங்கள் இருக்கின்றன என்று தெரியவந்தும் அவை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

சம்பவம் இடம்பெற்ற பின்னர் அது தொடர்பான சாட்சிகள் கையில் இருக்கும் போதும் அது குறித்து இன்னும் நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் உள்ளது.

நாட்டில் எந்தவித பாதுகாப்பும் இல்லை. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து இரகசிய பொலிஸார் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தனர். மாவநெல்ல பகுதியில் புத்தர் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பெறப்பட்ட தகவலுக்கு அமைய சஹ்ரான் தலைமையிலான பிரபல உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் பொலிஸாரும் இரகசிய பொலிஸாரும் அவர்களை விடுதலை செய்தனர். ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்ய முயற்சி எடுத்தபோது அசாத்சாலியும் பூஜித் ஜயசுந்தரவும் அதனை தடுத்தனர்.

அவர்களிடமிருந்தா எமக்கான தேசிய பாதுகாப்பை எதிர்பார்க்க முடியும்? குறைந்த பட்சம் தேசிய பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பதை அறிவிக்க மூன்று மாதங்கள் என்பது தாமதம் தானே.

நான் இரகசிய பொலிஸார் பொறுப்பதிகாரியாக இருந்தால் ஒரே வாரத்திற்குள் வழக்கு தாக்கல் செய்திருப்பேன். அந்தளவுக்கு சாட்சிகள் இருக்கின்றன. நியூஸிலாந்து கிறிஸ்ட்சேர்ச் தாக்குதல் இடம்பெற்று அடுத்த நாளிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஏன் ஒரு வாரத்திற்குள் அதனை செய்ய எங்களால் முடியாதா? இதற்கான முதல் குற்றவாளி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. அடுத்தவர் சபாநாயகர் கரு ஜய சூரிய. அதன் பின்னரே சஹரான் குழுவினரை இந்த விடயத்தில் குற்றவாளிகளாக தொடர்புப் படுகின்றனர்.

இது குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சி வழங்கியுள்ளேன். அவ்வாறு இருக்கும்போது மீண்டும் குழு அமைத்து விசாரணை முன்னெடுப்பது என்பது அவசியமற்றதாகும்” என தெரிவித்துள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற குண்டு தாக்குதலின் முதல் குற்றவாளி பிரதமர் ரணிலே; ரணிலுக்கு பின்னரே சஹரான் குழு!

Previous
« Prev Post