onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Thursday, September 12, 2019

திருமணத்தின் முன் காதலனை சந்தித்த தங்கையை அடித்துக் கொன்ற சகோதரன் கனடாவிற்குள் நுழைந்தாரா?

  admin       Thursday, September 12, 2019


ஆணவக் கொலை” சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தனது நாட்டிற்குள் நுழைந்தாரா என்பதைக் கண்டுபிடிக்க கனடா அரசாங்கம் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இஸ்ரா கிரயேப் என்ற பாலஸ்தீன யுவதியின் மரணத்துடன் தொடர்புடையவர் என, யுவதியின் சகோதரனான இஹாப் கிரயேப் என்பவர் பெயரிடப்பட்டிருந்தார்.

பாலஸ்தீனத்தை மட்டுமல்ல, மத்திய கிழக்கு வட்டகையையே உலுக்கியிருந்தது இந்த கொலை. மத்திய கிழக்கின் பல இடங்களில் இந்த கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன.

இஸ்ரா கிரயேப் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், திருமணத்திற்கு முன்னரே தனது வாழ்க்கைத்துணையை சந்தித்து பேசியிருந்தார். இந்த வீடியோவால் பழைமைவாத அமைப்புக்கள் ஆத்திரமடைந்ததுடன், அந்த சிந்தனையையுடைய இஸ்ரா கிரயேபின் குடும்பமும் ஆத்திரமடைந்தது.

இஸ்ரா கிரயேப் கடந்த மாதம் 22 ஆம் திகதி குடும்பத்தினரின் தொடர் தாக்குதலின் பின்னர் உயிரிழந்தார். இந்த கொலையுடன் தொடர்புடையவராக, யுவதியின் சகோதரர் இஹாப் க்ராயெப் கனடாவிற்குள் நுழைந்துள்ளாரா என்றே, கனடா விசாரணையை தொடங்கியுள்ளது.

இஹாப் க்ராயெப் ஒரு கனேடிய குடியுரிமை பெற்றவர் என்றும், கொலைக்குப் பின்னர் அவர் கனடா திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும், இஹாப் கிரயேப் முன்னர் கனடாவில் இருந்ததற்கான ஆதாரங்களை கனேடிய அதிகாரிகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றும் அவருக்கு கனேடிய தொடர்புகள் இல்லை என்றும் பாலஸ்தீனிய பொலிஸ் துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் கிரேக்கத்துடனேயே இஹாப்புக்கு தொடர்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! திருமணத்தின் முன் காதலனை சந்தித்த தங்கையை அடித்துக் கொன்ற சகோதரன் கனடாவிற்குள் நுழைந்தாரா?

Previous
« Prev Post