Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 12 செப்டம்பர், 2019

எழுக தமிழிற்கு நாம் எதிரானவர்கள் அல்ல: தமிழ் மக்கள் பேரவையிடம் தெரிவித்தார் இரா.சம்பந்தன்!

  admin       வியாழன், 12 செப்டம்பர், 2019


எழுக தமிழ் நிகழ்வின் நோக்கங்களுடன் எமக்கு எந்த முரண்பாடும் இல்லை. அது காலத்தின் தேவையான நிகழ்வு. அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிராக செயற்படாது.

இப்படி இன்று தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்தியர் பூ.லக்ஸ்மனிடம் இன்று தொலைபேசி வழியாக, இரா.சம்பந்தன் இந்த தகவலை தெரிவித்ததை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

எழுக தமிழ் நிகழ்விற்கு ஆதரவு திரட்டும் நோக்கத்துடன், தமிழ் மக்கள் பேரவையினர் பல்வேறு அரசியல் கட்சிகளையும் சந்தித்து பேசி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக, கொழும்பில் தங்கியுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பூ.லக்ஸ்மன்.

எழுக தமிழின் நோக்கங்களை குறிப்பிட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதை ஆதரவளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த இரா.சம்பந்தன், “எழுக தமிழ் நிகழ்வின் நோக்கங்களுடன் எமக்கு எந்த முரண்பாடும் இல்லை. அது காலத்தின் தேவையான நிகழ்வு. எனினும், அதன் ஏற்பாட்டு குழுவிலுள்ள சில அமைப்புரீதியான விவகாரங்களாலேயே அதை பகிரங்கமாக ஆதரிப்பதில் எமக்கு தயக்கம் உள்ளது. ஆனாலும், எழுக தமிழ் போன்ற நிகழ்வுகள் நடக்க வேண்டும். அதை நாம் ஆதரிக்கிறோம். அதில் கலந்துகொள்வதா இல்லையா என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு அடுத்த சில நாட்களில் கலந்துரையாடி, ஒரு முடிவை உங்களிற்கு அறிவிக்கிறோம்“ என்றார்.

தமிழ் மக்கள் பேரவையின் தலைமை பதவியில் விக்னேஸ்வரன் தொடர்ந்து நீடிப்பதையே, சம்பந்தன் அப்படி நாசூக்காக குறிப்பிட்டார்.

இதேவேளை, எழுக தமிழ் நிகழ்வில் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களையும் தமிழ் மக்கள் பேரவையினர் சந்தித்து பேசினர். மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரையும் சந்தித்து பேசினார்கள். “எழுக தமிழிற்கு தாம் எதிரானவர்கள் அல்ல. எனினும், தேர்தல் நெருங்கும் சமயத்தில், ஒரு கட்சி தலைவர் தமிழ் மக்கள் பேரவையின் தலைமையில் நீடிக்கும் நிலையில், எழுக தமிழில் நாம் பங்கேற்பது பொருத்தமானதா என்ற குழப்பம்தான் எம்மிடமுள்ளது“ என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் தலைமையல் நீடிக்கும் நிலையில், எழுக தமிழில் கலந்துகொள்வது, அவரை அரசியல்ரீதியான பலப்படுத்தும் செயற்பாடு என தமிழ் தேசிய கூட்டமைப்பு கருதுகிறது. இதனாலேயே, பேரணியில் கலந்துகொள்வதில் குழப்பமான நிலையில் உள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! எழுக தமிழிற்கு நாம் எதிரானவர்கள் அல்ல: தமிழ் மக்கள் பேரவையிடம் தெரிவித்தார் இரா.சம்பந்தன்!

Previous
« Prev Post