onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Friday, September 13, 2019

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டு மழையை பொழிந்துள்ள மணல் மாபியா டகளஸ் தேவாநந்தா!

  admin       Friday, September 13, 2019


வெண்ணையை வைத்துக் கொண்டு ஊர் எல்லாம் நெய்க்கு அலைவது போல தமிழ் மக்களின் தலைமைகளின் செயற்பாடுகளால் தமிழ் மக்களால் தங்களது அரசியல் உரிமைகளை அனுபவிக்க முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா குற்றம்சாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் தான் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வரும் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் தற்போதைய சூழலில் இருப்பதாகவும் டக்ளஸ் தேவாநந்தா குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக அவருடன் கூட்டணி அமைத்துள்ள டக்ளஸ் தேவாநந்தா, தமிழர் தாயகத்தில் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவு திரட்டும் வகையில் நடத்திவரும் கூட்டங்களின் தொடர்ச்சியாக இன்றைய தினம் (13) மட்டக்களப்பில் நடத்திய விசேட கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.

மாகாண சபைகளுக்கு ஒரு மேல்சபை அமைப்பது அவசியம் என குறிப்பிட்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அந்த மேல் சபை சிறிலங்கா நாடாளுமன்றத்தைப் போன்று பெரும்பான்மை சமூகமான சிங்கள இனத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தாமல் ஐம்பதுக்கு ஐம்பது சிறுபான்மையினரையும் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டு மழையை பொழிந்துள்ள மணல் மாபியா டகளஸ் தேவாநந்தா!

Previous
« Prev Post