Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 25 செப்டம்பர், 2019

என்ன நோக்கத்திற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் வீட்டிற்கு நடிகர் சதீஸ் சென்றார்?; விசாரணையை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு பிரிவு!

  admin       புதன், 25 செப்டம்பர், 2019


யாழ்ப்பாணத்திற்கு சென்று விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரின் வீட்டை பார்வையிட்ட, தென்னிந்திய நடிகர் சதீஸ் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வல்வெட்டித்துறையிலுள்ள தலைவர் பிரபாகரனின் வீட்டுக்கு சென்ற நடிகர் சதீஷ் அழுததாக தகவல்கள் வெளியாகிருந்தன.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எனினும் என்ன நோக்கத்திற்காக அவர் அங்கு சென்றார்? அவரை யார் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்தார்கள் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நான் சென்றிருந்த போது பிரபாகரன் ஐயா வாழ்ந்த வீட்டிற்கு சென்று பார்த்தேன். என்னால் அழுகையை தவிர்க்க முடியவில்லை என ஊடகம் ஒன்றுக்கு நடிகர் சதீஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! என்ன நோக்கத்திற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் வீட்டிற்கு நடிகர் சதீஸ் சென்றார்?; விசாரணையை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு பிரிவு!

Previous
« Prev Post