Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

சஜித்துக்கு தமது ஆதரவை தெரிவித்த தமிழ் மக்கள் முன்னேற்ற கூட்டணியினர்!

  admin       வெள்ளி, 27 செப்டம்பர், 2019


இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் தலைவர் போராசிரியரும் யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமாகிய திரு.சி.மோகனதாஸ் அவர்களும் மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு.கணேஸ்வரன் வேலாயுதம் அவர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

நேற்றையதினம் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவரை மக்கள் முன்னேற்றக் கூட்டணி கட்சி ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார். குறைந்த வயதில் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்ட ஒருவராக காணப்படுவதால் வேறுபட்ட சிந்தனைகள் கொண்டவராக இருப்பார் என நம்புகின்றோம். தமிழ் இன மக்களின் பிரச்சனைகளை புரிந்து அவர்களுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு ஆர்வம் கொண்ட வேட்பாளராக இருப்பார். எமது கட்சி அவரை சந்தித்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் வடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி குறிப்பாக விவசாயம் ஆழ்கடல் மீன்படி தண்ணீர் சேமிப்பு போன்ற விடயங்கள் பற்றியும் கலந்துரையாட உள்ளோம்.

 தற்போது ஊழல்கள் பரவலடைந்து காணப்படுகிறது. அவற்றில் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ச்சியாக அவர்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது ஊழல்களுக்கு துணைபோகின்றவர்களாக இருந்தால் தமிழ் மக்கள் முன்னேற்றமடைய வாய்ப்பில்லை. எனவே இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி வடமாகாணத்தில் வளர்ச்சியினை ஏற்படுத்துவதற்கு உந்துசக்தியாக இருப்போம் என்பதில் எதுவித ஐயமுமில்லை. 

சஜித் பிரேமதாச வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் மாகாண சபைகளுக்கான உயர்பட்ச அதிகாரத்தினை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்திற்கமைய நாம் நேர்மையான வழியில் சென்று வடமாகாணத்தின் வளர்ச்சியை ஏற்படுத்துவோம். தமிழ் மக்கள் இதுவரை வெள்ளைவான் கடத்தல் இனக்கலவரங்கள் ஆர்ப்பாட்டங்கள் என அனைத்தையும் அனுபவித்து விட்டார்கள். இனியும் அவ்வாறான சூழலை எதிர்கொள்ளாது அமைதியன நிம்மதியான சூழலில் வாழ்வதை தக்கவைத்து கொண்டு கல்வி பொருளாதார அபிவிருத்தியை நோக்கி செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சஜித்துக்கு தமது ஆதரவை தெரிவித்த தமிழ் மக்கள் முன்னேற்ற கூட்டணியினர்!

Previous
« Prev Post