Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,politics,thinakkural,uthayan,srilankan tamil,jaffna,corona virus jaffna,jaffna news,jaffna sri lanka,jaffna news paper,jaffna phone shop,jaffna news today,jaffna tamil tv news,lanka,lankasri,parliament,today news sri lanka,tamilwin news,lankasri news,sri lanka latest news,sri lanka updates today,sri lanka current situation,news sri lanka,sri lanka tamil news

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 28 செப்டம்பர், 2019

யானைகளின் உயிரிழப்பு 7 ஆக அதிகரித்தது: இறந்த தாயை தட்டியெழுப்ப முயலும் குட்டி (படங்கள்)

  admin       சனி, 28 செப்டம்பர், 2019


ஹபரனவின் ஹிரிவதுன்னவில் இன்றும் மேலும் 3 உயிரிழந்த யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம், உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 4 யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தன. இன்று காலையில் ஒரு யானையின் உடல் மீட்கப்பட்டது.

இன்று காலை மீட்கப்பட்ட யானை ஒரு பெண் யானையாகும். அதன் குட்டி, தாயின் உயிரிழந்த தாய் யானையின் உடலை சுற்றிசுற்றி வந்து கொண்டிருந்தது. யாரையும் நெருங்க விடாமல் விரட்டியது. அடிக்கடி தாய் யானையை தொட்டும், இழுத்தும் எழுப்ப முயன்று கொண்டிருக்கிறது.

சிகிரியா வனவிலங்கு அலுவலகம், இராணுவம், ஹபரன காவல்துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் வேறு யானைகள் இறந்துள்ளனவா என அறிய இன்று காலை மேலதிக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். வனப்பகுதிக்குள் மேலும் இரண்டு யானைகள் காணப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்த யானைகளின் பிரேத பரிசோதனை வனவிலங்கு துறையின் கால்நடை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகிறது. எனினும், குட்டி யானை, தாய் யானையின் பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்காததால், வனவிலங்கு அதிகாரிகள் குட்டி யானையை பிரித்து வேறு இடத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.

உயிரிழந்த ஏழு யானைகளும் பெண் யானைகளென வனவிலங்கு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இறப்புக்கான காரணத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும் மேலும் விசாரணை நடத்தி வருவதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அந்த பகுதியில் மேலும் யானைகள் இறந்துள்ளனவா என அறிய பொலிசார், வனவிலங்கு அதிகாரிகள், இராணுவம் மற்றும் குடியிருப்பாளர்கள் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர்.







logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! யானைகளின் உயிரிழப்பு 7 ஆக அதிகரித்தது: இறந்த தாயை தட்டியெழுப்ப முயலும் குட்டி (படங்கள்)

Previous
« Prev Post