onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Friday, September 13, 2019

ஒன்றரை வயதில் கடத்தப்பட்ட குழந்தை: 20 வருடங்களுக்குப்பின் பெற்றோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மகன்; சினிமாவை மிஞ்சிய சம்பவம்!

  admin       Friday, September 13, 2019


20 வருடங்களுக்கு முன்பு கடத்தி விற்கப்பட்ட சென்னை சேர்ந்த சிறுவன், அமெரிக்க இளைஞராக தாயகம் திரும்பி வந்து பெற்றோரை சந்தித்து நெகிழ வைத்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மேலும், தமிழ் பேச தெரியாத மகன், ஆங்கிலம் தெரியாத பெற்றோருடன், வார்த்தைகளின்றி கண்களால் பாசத்தை வெளிப்படுத்திய விதம் சினிமாவை விஞ்சும் திருப்பங்கள் நிறைந்த நிகழ்வாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர் நாகேஷ்வரராவ். இவரது மகன் சுபாஷ் ஒன்றரை வயது குழந்தையாக இருக்கும் போது கடத்தப்பட்டதாக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பல வருடங்களுக்கு பிறகு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் கடத்தல்காரன் ஒருவன் சிக்கினான். அவன் சுபாஷை கடத்தி ஒரு சிறுவர் இல்லத்தில் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றதும், அவர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து, குழந்தை இல்லாத அமெரிக்க தம்பதிக்கு விற்றிருப்பதும், அங்கு அவன் அவினாஷ் என்கிற பெயரில் வளர்ந்து வருவதும் கண்டு பிடிக்கப்பட்டது.

மகன் உயிருடன் இருப்பதை கேள்விப்பட்ட தாயார் சிவகாமி, கடந்த மாதம் முதல்முறையாக செல்போன் வீடியோ காலில் பேசியுள்ளார். சில நாட்களுக்கு முன் சென்னை திரும்பிய சுபாஷ் பெற்றோரை நேரில் சந்தித்தார். தமிழ் தெரியாத மகனும், ஆங்கிலம் தெரியாத பெற்றோரும் சுபாஷிடம் பேச முடியாமல், கண்களால் பேசியது நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. தாய் சிவகாமி சுபாஷுக்கு உணவு ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.

சுபாஷ் தங்கள் குழந்தை என்றாலும் அவரை வளர்த்த பெற்றோரும் பாசத்துடன் இருப்பார்கள் என்பதால் அவர் அமெரிக்காவில் இருப்பதுதான் சரி என்று தாய் சிவகாமி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தமிழக மக்களை பெரும் ஆச்சர்யத்திலும், நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஒன்றரை வயதில் கடத்தப்பட்ட குழந்தை: 20 வருடங்களுக்குப்பின் பெற்றோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மகன்; சினிமாவை மிஞ்சிய சம்பவம்!

Previous
« Prev Post