Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 7 செப்டம்பர், 2019

இன்று இஸ்ரோ படைத்திருப்பது மிகப்பெரிய சாதனை. சந்திரயான் 2 பயணம் 99% வெற்றியடைந்திருக்கிறது.

  admin       சனி, 7 செப்டம்பர், 2019


சந்திரயான் 2வின் பயணம் சந்திர மண்டலத்தில் 3 பணிகளை செய்யும். 

1. அது சந்திரனின் சுற்றுவட்ட பாதையில் ஓராண்டு காலம் சுற்றி வந்து சந்திரனை ஆராய்ச்சி செய்யும் 'ஆர்பிட்டர்' எனும் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலை நிறுத்துதல். 

அது வெற்றிகரமாக முடிந்தது. ஆர்பிட்டர் சந்திரனின் மேலாக நிலை கொண்டு வெற்றிகரமாக சந்திரனை சுற்றி வருகிறது.

2. விக்ரம் எனப்படும் லேண்டர் - இதுதான் பின்னடைவை சந்தித்திருக்கிறது. பூமியிலிருந்து 3 லட்சம் கி.மீருக்கும் மேலான தூரத்தை வெற்றிகரமாக கடந்து வெறும் 2.1 கி.மீ தூரத்தில் பூமியுடனான தொடர்பை இழந்திருக்கிறது விக்ரம் லேண்டர்.

அதுவும் உலகின் எந்த நாடும் இதுவரை தரையிறங்கியிறாத நிலவின் தென்பகுதியில் கால் பதிக்க முயன்றதெல்லாம் சாதாரண காரியம் அல்ல. அந்தளவுக்கு கடினமான ஒரு செயலில் 99% பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது இஸ்ரோ.

அமெரிக்கா உட்பட உலகின் எந்த ஒரு நாடும் இதுவரை முதல் முயற்சியிலேயே நிலவில் தங்கள் செயற்கைக்கோளை நிலை நிறுத்தியதில்லை.

ஆனால் அதை செய்த ஒரே நாடு என்ற சாதனையை படைத்திருப்பது இந்தியா மட்டும்தான்.

சந்திரயான் - 1,  செயற்கைக்கோள்  இந்தியாவின் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு 10 மாத காலம் ஆராய்ச்சி செய்தது.

சந்திரயான் -1, நிலவில் தண்ணீர் இருந்ததற்கான தடயங்களை கண்டுபிடித்தது. இது வரலாற்றில் மிகப்பெரிய சாதனை. மேலும் வடக்கு துருவ பகுதியில், நீர்க்கட்டிகள் இருந்ததையும், நிலவின் தரைபரப்பில், மெக்னீசியம், அலுமினியம் மற்றும் சிலிகான் ஆகியன இருந்ததையும் சந்திரயான்-1 கண்டுபிடித்தது.

தற்போது சந்திரயான் 2 ஆர்பிட்டரும் இரண்டாவது முயற்சியிலேயே சந்திரனின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இந்தியாவின் இரண்டாம் செயற்கைக்கோள்.

இதன்மூலம் இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்ய முடியும்.

முதன்முதலில் சந்திரனில் லேண்டரை இறக்கிய நாடு சோவியத் ரஷ்யா.

அந்த வெற்றிக்கு அவர்கள் எந்தளவு முயன்றார்கள் தெரியுமா?

11 முறை.

முதல் 10 முறை நிலவுக்கு லேண்டரை அனுப்பி அதை வெற்றிகரமாக தரையிறக்க முடியாமல் தோற்றார்கள். 11வது முறை முயற்சிக்கும்போதுதான் அவர்களுக்கு அந்த வெற்றி கிடைத்தது.

அதன் பிறகே நாசா நிலவிற்கு லேண்டரை அனுப்பியது.

சந்திரயான் 1 - திருமிகு. மயில்சாமி அண்ணாதுரை

சந்திரயான் 2 - திருமிகு. சிவன்

இருவரின் காலத்திலும் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இந்தியாவின் ஆர்பிட்டர் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இஸ்ரோ இப்போது முதல்முறைதான் லேண்டரை அனுப்பியிருக்கிறது. அடுத்தமுறை நிச்சயம் வெற்றியடைவோம்.

சந்திரயான் 2 - இன்று நாம் கடந்துபோகும் ஒரு நாள் செய்தி ஆனால் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இது பத்து ஆண்டு கால உழைப்பு.

PROUD OF YOU 💪 #ISRO

#Chandrayaan2 

Pic - GRAIL Gravity map of the Moon

(GRAIL - Gravity Recovery and Interior Laboratory - புவியீர்ப்பு மீட்சி மற்றும் உட்பக்க ஆய்வகம் )
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! இன்று இஸ்ரோ படைத்திருப்பது மிகப்பெரிய சாதனை. சந்திரயான் 2 பயணம் 99% வெற்றியடைந்திருக்கிறது.

Previous
« Prev Post