Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 28 செப்டம்பர், 2019

15 வயது சகோதரியை சீரழித்த 20 வயது அண்ணன் மட்டக்களப்பு பொலிசாரால் கைது!

  admin       சனி, 28 செப்டம்பர், 2019


மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் 15 வயது சிறுமியான சகோதரியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 20 வயதுடைய சகோதரனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று சனிக்கிழமை (28) உத்தரவிட்டார்.

சிறுமியின் தந்தையாரின் முதல் மனைவியின் மகனான 20 வயது சகோதரன், தந்தையாரின் இரண்டாவதாக மனைவியின் மகளான 15 சிறுமியான சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து இளைஞர் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு தலைமையக பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார் .

கைதான இளைஞர் வேறு ஒரு பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்து வருவதும், பெற்றொருடன் வாழ்ந்து வரும் பாடசாலை மாணவியான சிறுமியை அவர் கடந்த ஒரு மாதகாலமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளதும் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இளைஞரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 14 நாட்டகள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! 15 வயது சகோதரியை சீரழித்த 20 வயது அண்ணன் மட்டக்களப்பு பொலிசாரால் கைது!

Previous
« Prev Post