Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 7 ஆகஸ்ட், 2019

UPDATE: சேட் ஒன்றிற்கான சண்டையே அம்மம்மாவின் உயிரை பறித்தது!

  admin       புதன், 7 ஆகஸ்ட், 2019


வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக் கேணிப் பகுதியில் பேரனின் கத்திக்குத்தில் அம்மம்மா உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேட் ஒன்று தொடர்பாக சகோதரர்களிற்கிடையில் எழுந்த மோதலே, அம்மம்மாவின் உயிரை பறித்தது.

16, 17 வயதுடைய அண்ணன் தம்பிகளிற்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, மோதலாகியது. இதன்போது கத்தியொன்றினால் அண்ணனை குத்த முயன்ற தம்பியை, அம்மம்மா தடுத்தபோது, அவரது நெஞ்சில் கத்தி ஏறியது.

சம்பவத்தில் காயமுற்றவரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச் சென்ற போதும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

முன்னைய செய்தி: 16 வயது பேரனின் கத்திக்குத்தில் அம்மம்மா பலி: யாழில் துயரம்!
 
வடமராட்சி கிழக்கில் தனது பேரனின் தாக்குதலில் மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார்.

அண்ணன், தம்பிக்கிடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற சமயத்திலேயே அம்மம்மா உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இந்த சம்பவம் நடந்தது.

சுப்ரமணியம் கங்கேஸ்வரி (72) என்பவரே உயிரிழந்தார்.

நேற்றிரவு சகோதரர்களிற்கிடையில் மோதல் ஏற்பட்டது. மூத்த சகோதரனை கத்தியால் குத்துவதற்கு இளைய சகோதரன் முயன்றான். அதை தடுக்க முயன்ற அம்மம்மாவின் நெஞ்சில் கத்தி பாய்ந்தது. காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், வழியில் உயிரிழந்துள்ளார்.

16 வயது சுபாஸ் சஷிகரன் என்பவரே கத்தியால் குத்தினார். அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! UPDATE: சேட் ஒன்றிற்கான சண்டையே அம்மம்மாவின் உயிரை பறித்தது!

Previous
« Prev Post