onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Thursday, August 8, 2019

உலகின் வல்லரசுக்கே இந்த நிலை! விடுக்கப்பட்டது முக்கிய எச்சரிக்கை!Travel warning for travelers to US

  admin       Thursday, August 8, 2019


அமெரிக்காவில் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படும் தனிமனித துப்பாக்கிப்பிரயோகம் அதனால் ஏற்படும் அநியாய உயிரிழப்புக்களை அடுத்து அமெரிக்காவுக்கு செல்பவர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த பயண எச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், சந்தைக் கட்டடத் தொகுதிகள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட சன நெரிசல் மிக்க பகுதிகளுக்குச் செல்லும்போது அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய நாடுகளுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இவ்வாறான பயணத் தடைகளை விதிப்பதால், அதற்கு இணையாக இவ்வாறான எச்சரிக்கை விடுப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Travel warning for travelers to US, 




logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! உலகின் வல்லரசுக்கே இந்த நிலை! விடுக்கப்பட்டது முக்கிய எச்சரிக்கை!Travel warning for travelers to US

Previous
« Prev Post