onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Thursday, August 15, 2019

இலங்கையில் யானைக்கு நடக்கும் கொடூரம்! உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம் #Save_elephant

  admin       Thursday, August 15, 2019




வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையில் வருடாந்த பெரஹர உற்சவத்தின் போது வீதி ஊர்வலத்தில் ஈடுபடும் பாதிக்கப்பட்ட யானை தொடர்பான அதிர்ச்சி புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
எசல பெரஹர திருவிழாவில் ஈடுபடும் 60 யானைகளில் ஒன்றான 70 வயதான ஆசிய யானை டிக்கிரியின் புகைப்படங்களை, யானைகளை பாதுகாக்கும் அறக்கட்டளை நிலையம் வெளியிட்டுள்ளது.

மனிதர்களை மகிழ்விப்பதற்காக கம்பீரமான விலங்குகள் அனுபவிக்கும் துன்பத்தை இந்த புகைப்படங்கள் வெளிப்படுத்துகிறது என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

“10 நாட்கள் நடைபெறும் பெரஹேராவில் யானைகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவது வழக்கமாகும். எனினும் அலக்கரிப்பதற்கு முன்னர் டிக்கரியின் படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் டிக்கிரி தினமும் இரவில் பட்டாசு சத்தம், தூசி மற்றும் புகைக்கு மத்தியில் நடந்து செல்லும். ஒவ்வொரு இரவும் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். திருவிழாவின் போது மக்கள் அதனிடம் ஆசி பெறுவார்கள். ஆனால் ஆடை காரணமாக யாரும் யானையின் மோசமான நிலைமை குறித்து யாரும் நினைத்து பார்ப்பதில்லை.

டிக்கிரியின் கண்களில் கண்ணீரை யாரும் காணவில்லை. உடலை அலங்கரிக்கும் பிரகாசமான விளக்குகளால் டிக்கிரி காயமடைந்துள்ளது. நடக்கும்போது கால்கள் குறுகலாக இருப்பதால் காலடி எடுத்து வைப்பதற்கு டிக்கரிக்கு உள்ள சிரமத்தை யாரும் காணவில்லை” என அறக்கட்ட நிலையத்தின் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்த பதிவால் கோபமடைந்த மக்கள் இந்த யானை காப்பாற்ற வேண்டும் என எண்ணிற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! இலங்கையில் யானைக்கு நடக்கும் கொடூரம்! உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம் #Save_elephant

Previous
« Prev Post