Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

அத்துமீறி வயல் அறுவடை சம்பவத்தில் செய்தியாளர் உட்பட ஏழு பேர் கைது!

  admin       திங்கள், 12 ஆகஸ்ட், 2019


சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த பிரதேசத்தில் ஒரு மாற்றுவலுள்ள இளைஞன் ஒருவர் தனது தந்தையாரை தொடர்ந்து ஒன்றரை ஏக்கர் வயல் காணியில் சுமார் முப்பது வருடங்களாக பயிர்ச்செய்து வருகின்றார். இக் காணிக்கு அருகில் உள்ள மூன்று ஏக்கர் காணியின் பெண் ஒருவர், பிரதேச செய்தியாளரான பாஸ்கரன் என்பவருடன் இணைந்து அவ் இளைஞனின் காணியை ஆக்கிரமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளதோடு, கடந்த வெள்ளிக் கிழமை அவர்களின் காணிக்குள் அத்துமீறி சென்று அறுவடையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனை குறித்த இளைஞன் கமக்கார அமைப்பின் உதவியுடன் சென்று தடுக்க முற்பட்ட போது அத்துமீறு அறுவடையில் ஈடுபட்ட பெண் அவர்கள் மீது மிளகாய் தூள் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதன் போது இரண்டு தரப்பினர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தினை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார் செய்தியாலாளர் பாஸ்கரன் உட்பட ஏழு பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நாளைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்.

செய்தியாலாளர் பாஸ்கரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! அத்துமீறி வயல் அறுவடை சம்பவத்தில் செய்தியாளர் உட்பட ஏழு பேர் கைது!

Previous
« Prev Post