Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

ஏழைகளின் எம்.ஜி.ஆர் சஜித்; எமக்கு புகலிடம் தந்தீர்கள்; ஜனாதிபதி தேர்தலில் சரியான முடிவெடுப்போம்: செல்வம் எம்.பி!:

  admin       வியாழன், 8 ஆகஸ்ட், 2019


மன்னார் ஜோசெப் வாஸ் கிராமத்தில் இரண்டு மாதிரிக் கிராமங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன. அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் கலந்து கொண்டார்.

செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றும்போது,

ஏழை மக்களின் எம்.ஜி ஆர் போல, ஏழை மக்களின் துயர்துடைக்க துடித்துக் கொண்டிருக்கிற ஒரேயொரு அமைச்சர் என்றால் அது சஜித் அமைச்சர்தான்.

ஜனாதிபதி தேர்தலில் பொதஜன பெரமுனவில் கோத்தபாய நிறுத்தப்படுவதாக கதைகள் அடிபடுகிறது. இங்கால் பக்கம் சஜித் பிரேமதாசாவின் பெயர் அதிகமாக அடிப்படுகிறது. இங்கும் பல பெயர்கள் முளைத்துக் கொண்டிருக்கின.

வீட்டை எப்படி மறக்கமாட்டோமோ அப்படி, வீடு தந்த அமைச்சரையும் மறக்க மாட்டோம். நீங்கள் எங்களிற்கு புகலிடம் தந்தீர்கள். எங்கள் மக்களின் மனங்களில் நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும்போது, எங்கள் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள். வீட்டை எப்படி மறக்க முடியாதோ, அப்படி வீடு தந்த உங்களையும் மறக்க மாட்டோம் என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஏழைகளின் எம்.ஜி.ஆர் சஜித்; எமக்கு புகலிடம் தந்தீர்கள்; ஜனாதிபதி தேர்தலில் சரியான முடிவெடுப்போம்: செல்வம் எம்.பி!:

Previous
« Prev Post